ETV Bharat / state

'குரூப் 2, 2ஏ தேர்விற்கு விண்ணப்பிக்க கால அவகாசத்தை நீட்டிக்க முடியாது' - பழனிவேல் தியாகராஜன் - குரூப் 2, 2ஏ தேர்விற்கு விண்ணப்பிக்க கால அவகாசத்தை நீட்டிக்க முடியாது

குரூப் 2, 2ஏ தேர்வுகளுக்கு இதுவரை 9 லட்சத்து 10 ஆயிரத்து 644 பேர் விண்ணப்பித்துள்ளதாகவும், கால அவகாசத்தை நீட்டித்தால் அது தவறுகளுக்கு வழிவகுத்துவிடும் என்பதாலும் கால அவகாசத்தை நீட்டிக்க முடியாது என்று நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

பழனிவேல் தியாகராஜன்
பழனிவேல் தியாகராஜன்
author img

By

Published : Mar 23, 2022, 8:42 PM IST

சென்னை: சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான பொது விவாதத்தில் இன்று (மார்ச் 23) பேசிய எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம், ஆதாரை இணைக்க வேண்டும் என்று டிஎன்பிஎஸ்சி (TNPSC) கூறியதால், குரூப் 2, 2ஏ தேர்வுகளுக்கு கிராமப்புற மாணவர்களால் விண்ணப்பிக்க முடியவில்லை என்றும், விண்ணப்பிக்கும் அவகாசம் இன்றுடன் நிறைவடைவதால் அதை நீட்டிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.

இதற்குப் பதிலளித்துப் பேசிய நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், "ஒரே விண்ணப்பதாரர் இரண்டு முறை விண்ணப்பிக்கக்கூடாது என்ற நடைமுறை 2020ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. 2020இல் கொண்டு வரப்பட்டாலும், நீதிமன்ற வழக்குகளால் இப்போது தான் அமலுக்கு வந்திருக்கிறது" என்று கூறினார்.

மேலும், இதுவரை 9 லட்சத்து 10 ஆயிரத்து 644 நபர்கள் குரூப்-2, 2ஏ தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளதாக குறிப்பிட்ட அவர், கால அவகாசத்தை நீட்டித்தால் அது தவறுகளுக்கு வழிவகுத்துவிடும் என்றும் வேறு வகையில் இதை சரி செய்ய முடியுமா என்று தேர்வாணையத்துடன் ஆலோசித்து அடுத்த தேர்வுக்கு முன்பாக முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: தேர்தலின்போது அளித்த 505 வாக்குறுதிகளில், 208 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன - முதலமைச்சர் அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.