ETV Bharat / state

புகார் அளிக்க வந்தவருக்கு போலீசாரே மிரட்டல்? - புகாரை திருத்த மிரட்டியதாக வாக்குமூலம்! - Chennai news

வெள்ளவேடு காவல் நிலையத்தில் வழிப்பறி குறித்து புகார் அளிக்கச் சென்ற தம்பதியை தரக்குறைவாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக காவல் நிலைய உதவி ஆய்வாளர் மற்றும் தலைமைக் காவலர் மீது ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

புகார்தாரரை தரக்குறைவாக பேசிய காவலர்களுக்கு பாய்ந்த உத்தரவு!

author img

By

Published : Mar 25, 2023, 2:00 PM IST

திருவள்ளூர்: திருமழிசையைச் சேர்ந்தவர் எல்லப்பன் (38). இவர் கட்டிடத் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், இவர் தன்னுடன் பணிபுரியும் சக ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க பணத்தை எடுத்துக் கொண்டு வாகனத்தில் சென்று உள்ளார். அப்போது இயற்கை உபாதைக்காக சாலையின் ஓரத்தில் நின்ற நேரத்தில், எல்லப்பனை வழிமறித்த 3 பேர் கொண்ட கும்பல், சரமாரியாக தாக்கி உள்ளது.

புகார்தாரார் அளித்த சிசிடிவி காட்சிகள் மற்றும் புகார் அளித்த தம்பதியின் முழு பேட்டி

மேலும் அவரிடம் இருந்து 14 ஆயிரத்து 500 ரூபாய் பணம் மற்றும் செல்போனையும் அந்த கும்பல் பறித்து உள்ளது. பின்னர் அங்கிருந்து 3 பேரும் தப்பி ஓடி உள்ளனர். இதனையடுத்து தப்பி ஓடிய கும்பலில் உள்ள 3 பேர், திருமழிசையைச் சேர்ந்த தங்கம், லோகேஷ் மற்றும் கார்த்திக் என அவர்களின் புகைப்படம் மற்றும் சம்பவத்தின் போது பதிவான சிசிடிவி காட்சிகள் உடன், ஆவடி காவல் ஆணையரக எல்லைக்கு உட்பட்ட வெள்ளவேடு காவல் நிலையத்தில் எல்லப்பன் புகார் அளித்து உள்ளார்.

ஆனால், உரிய ஆவணங்களோடு புகார் அளித்தும் தகுந்த நடவடிக்கை எடுக்காமல் இருந்தது மட்டுமல்லாமல், புகாரை திரும்பப் பெறுமாறும், வழிப்பறி செய்யாமல் திருடிச் சென்றதாக புகாரை மாற்றி அளிக்குமாறும் வெள்ளவேடு உளவு பிரிவு உதவி ஆய்வாளர் திருப்பதி மற்றும் தலைமைக் காவலர் சவரிதாஸ் ஆகியோர் எல்லப்பனை மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து எல்லப்பனின் மனைவி தேவி, ‘பாதிக்கப்பட்ட எங்களது புகாரை எடுக்காமல் ஏன் மிரட்டுகிறீர்கள்?’ என்று கேட்டதற்கு உதவி ஆய்வாளர் மிகவும் தரக்குறைவாகப் பேசியதாக கூறப்படுகிறது. அது மட்டுமின்றி எல்லப்பன் குடும்பத்தினருக்கு கொலை மிரட்டலும் விடுத்ததாக சொல்லப்படுகிறது.

இதனையடுத்து ஆவடி காவல் ஆணையரகத்தில், எல்லப்பன், அவரது மனைவி மற்றும் அவர்களது மகன் ஆகியோர் நேரில் வந்து புகார் அளித்துள்ளனர். இந்தப் புகாரின் அடிப்படையில், ஆவடி காவல் மாவட்ட துணை ஆணையருக்கு புகார் விசாரணை மேற்கொள்ள அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் அதில், தரக்குறைவாக நடந்து கொண்டிருக்கும் புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல், குற்றப்பிரிவுகளைக் குறைத்து போட்டதற்கான விளக்கத்தை அளிக்குமாறும் அதிகாரிகளுக்கு ஆவடி காவல் ஆணையரகம் உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க: மூதாட்டியை கட்டி போட்டு நிர்வாண வீடியோ எடுத்த கொள்ளையர்கள் கைது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.