ETV Bharat / state

பழுதடைந்துள்ள வானிலை ஆய்வு ரேடாரை சீரமைக்க பிரதமருக்கு கடிதம் - epair faulty meteorological radar

சென்னை துறைமுகத்தில் பழுதடைந்துள்ள வானிலை ஆய்வு கருவியான எஸ் வகை டாப்ளர் ரேடாரை சீரமைத்துத் தருமாறு மத்திய சென்னை எம்.பி. தயாநிதி மாறன் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

Dayanidhi Maran Request to PM Modi to repair  faulty meteorological radar at Chennai port.

author img

By

Published : Dec 2, 2020, 2:20 PM IST

சென்னை: "ஆண்டுதோறும் பெரியளவிலான புயலையும், மழைகளையும் சென்னை சில ஆண்டுகளாகச் சந்தித்துவருகின்றது. இனிவரும் நாள்களில் வங்காள விரிகுடாவில் அடுத்தடுத்த புயல் உருவாகவும் வாய்ப்புள்ளது. இந்நிலையில், நிவர் புயலுக்கு முன்பே சென்னை துறைமுகத்திலுள்ள வானிலை ஆய்வு ரேடார் பழுதடைந்தது.

இதனால் ரேடார் கருவியிலிருந்து புயலைத் துல்லியமாக கணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனைச் சமாளிக்கும்பொருட்டு காரைக்கால், ஸ்ரீஹரிகோட்டா ரேடார்களின் உதவிகொண்டு சென்னையின் வானிலை கணிக்கப்பட்டுவருகிறது.

ஆனால், நிவர் புயலால் காரைக்காலிருந்து கிடைக்கும் வானிலைத் தகவல்களையும் வானிலை ஆய்வு மையம் பதிவிடாமல் இருந்துவருகிறது. அதுமட்டுமின்றி, சென்னை துறைமுகத்தில் பழுதடைந்துள்ள ரேடாரை சீரமைக்கும் பணிகள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையிலேயே உள்ளன.

சென்னை துறைமுகத்தில் அமைக்கப்பட்டிருந்த ரேடார் அண்டை மாநிலங்களுக்கும் வானிலை தகவல்களைக் கணிக்க உதவி புரிந்துவந்தது.

கரோனா பேரிடர் காலத்திற்கு நடுவே, ரேடார் பழுதால் மக்கள் பலர் துல்லியமான வானிலை தகவல்கள் கிடைக்கப் பெறாமல் அவதியுறுகின்றனர்.

எனவே, இத்தகைய சூழலைத் தவிர்க்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தவும் போர்க்கால அடைப்படையில் ரேடாரை சீரமைத்து தர வேண்டும்" என மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதையும் படிங்க: புரெவி புயல்: பாம்பன் துறைமுகத்தில் 7ஆம் எண் புயல் கூண்டு ஏற்றம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.