தமிழ்நாடு காவல்துறையில் உளவுத்துறை கூடுதல் டிஜிபி பொறுப்பு என்பது மிகவும் முக்கியம் வாய்ந்தவையாக பார்க்கப்படும். உளவுத்துறை கூடுதல் டிஜிபி பதவி ஆட்சி நிர்வாகத்தில் முக்கிய அம்சமாக பார்க்கப்படுவதால் அதில் அனுபவம் மிக்க அலுவலர்கள் நியமிக்கப்படுவார்கள்.
அந்த வகையில் உளவுத்துறையில் அதிக அனுபவம் வாய்ந்தவரான டேவிட்சன் தேவாசீர்வாதத்தை உளவுத்துறை கூடுதல் டிஜிபியாக அரசு நியமனம் செய்துள்ளது. கடந்த சில மாதங்களாகவே காலியாக இருந்த இந்த பொறுப்பை உளவுத்துறை ஐஜியான ஈஸ்வர மூர்த்தி கூடுதலாக கவனித்து வந்தது குறிப்பிடத்தக்கத்து.
ஐபிஎஸ் டேவிட்சன் தேவாசீர்வாதம் 1995 ஆம் ஆண்டு பேட்ச் அலுவலராக காவல்துறையில் ஏஎஸ்பியாக பணியில் சேர்ந்தார். பின்னர் கடலூர் எஸ்பி, கியூ பிராஞ் எஸ்பி, போதை பொருள் நுண்ணறிவு பிரிவு டிஐஜி, உளவுத்துறை டிஜிஜி, ஐஜி, மதுரை, கோவை காவல் ஆணையர், ஏடிஜிபி தொழில்நுட்ப பிரிவு என பல முக்கிய பொறுப்புகளை டேவிட்சன் தேவாசீர்வாதம் வகித்துள்ளார்.
கியூ பிராஞ் சிஐடியாக பணிப்புரிந்த போது தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தை கண்காணித்தும், மாவோயிஸ்ட் ஊடுருவல் குறித்த பணியை சிறப்பாக செய்ததால் பாராட்டை பெற்றார். அதேபோல் தூத்துக்குடி மாவட்ட கன்னிவெடி வழக்கு உள்ளிட்ட பல வழக்குகளை சிறப்பாக கையாண்டவர்.
இதையும் படிங்க: “உங்கள் தொகுதியில் முதலமைச்சர்”- ஷில்பா பிரபாகர் சிறப்பு அலுவலராக நியமனம்!