ETV Bharat / state

ரவுடிகளைக் கைது செய்ய டேர் ஆப்ரேஷன் - சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் - dare operation for Chennai gangsters

ரவுடிகள் வகைப்படுத்தப்பட்டு, டேர் (Direct Action against Rowdy Elements) ஆப்ரேஷன் மூலம் கைது செய்யப்படுவார்கள் என சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

police commissioner Shankar Jiwal
காவல் ஆணையர் சங்கர் ஜிவால்
author img

By

Published : Jul 23, 2021, 9:41 PM IST

சென்னை: வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் நிர்பயா திட்டத்தின்கீழ் பெண்களுக்கான சிறப்பு ஆலோசனை மற்றும் உதவி மையத்தை சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் இன்று (ஜூலை23) தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் சமூகநல பாதுகாப்புத்துறை முதன்மைச் செயலாளர் சம்பு கல்லோலிக்கா, கூடுதல் ஆணையர் தேன்மொழி ஆகியோர் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், 'நீதிமன்ற உத்தரவின்படி, காவல் ஆணையர் அலுவலகத்தில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான ஆலோசனை மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இதனை சென்னை காவல் துறையும், சமூக நலத்துறையும் இணைந்து நடத்தும்.

பெண்களுக்கு ஆலோசகர்கள்

இந்த மையமானது மூன்று வருடங்கள் தொடர்ந்து செயல்படும். இங்கு புகார் அளிக்க நேரடியாக வருபவர்களுக்கும்; பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான உதவி எண் ஆன 181 புகார் அளிப்பவர்களுக்கும்; அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் மூலம் புகார்கள் அளித்து வருபவர்களுக்கும் ஆலோசனை வழங்கப்படும்.

பெண்களுக்கான ஆலோசகர், குழந்தைகளுக்கான ஆலோசகர் மற்றும் சட்ட ஆலோசகர் என மூன்று ஆலோசகர்கள் இங்கு உள்ளனர்.

இந்த மையமானது நிர்பயா நிதித்திட்டத்தின்கீழ் சென்னையில் செயல்படுகிறது. தாம்பரத்தில் ஒரு மையமும் எழும்பூரில் ஒரு மையமும் ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ள நிலையில், இது மூன்றாவது மையமாக இன்று முதல் செயல்படும்'என்றார்.

டேர் ஆப்ரேஷன் ('DARE’ operation)

தொடர்ந்து பேசிய அவர், 'டேர் எனும் 'DARE' (’Direct Action against Rowdy Elements') சிறப்பு ஆப்ரேஷன் மூலம் ரவுடிகளின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

கடந்த பத்து ஆண்டுகளாக உள்ள அவர்களின் செயல்பாடுகள்படி ரவுடிகளின் பெயர்கள் கேட்டகரி A+, A, B என வகைப்படுத்தப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும்.

பொதுமக்களை நேரடியாக தாக்குபவர்கள், மாமூல் வசூலிப்பவர்கள் உடனடியாக கைது செய்யப்படுவார்கள்.

நிபந்தனை பிணையில் வெளிவந்து தலைமறைவாக உள்ள சுமார் 39 ரவுடிகளை பிடிக்கவும், தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது' என்றார்.

காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பேட்டி

தமிழ்நாட்டில் 34 மையங்கள்

தொடர்ந்து பேசிய சமூகநல பாதுகாப்புத்துறை முதன்மைச்செயலாளர் சம்பு கல்லோலிக்கா, 'குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம், வரதட்சணை தடுப்புச் சட்டம், பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் என ஒன்பது சட்டங்களுக்குகீழ் வரும் குற்றங்களால் பாதிக்கப்படும் பெண்களுக்கு இங்கு ஆலோசனை வழங்கப்படும்.

தமிழ்நாட்டில் 34 மையங்கள் இதுபோல செயல்படுகிறது'என்றார்.

இதையும் படிங்க: 'சொந்தத் தேவைக்குப் பேருந்தில் சென்றால் காவலர்கள் பயணச்சீட்டு எடுக்க வேண்டும்'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.