சென்னை: திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் 12ஆம் வகுப்பு மாணவன் ஒருவனை அதே பள்ளியில் படிக்கும் மாணவர்கள் கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி இரவில் முனியாண்டியின் வீட்டுக்குள் புகுந்து மாணவரையும், அவரது தங்கையையும் அரிவாளால் வெட்டினர்.
இதில், படுகாயமடைந்த இருவரும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களு சென்னை ஸ்டான்லி சிறப்பு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது மட்டும் இல்லாமல், பட்டியலின மாணவர்களிடைய பாதுகாப்பின்றி இருக்கும் சூழலும் உருவாகி உள்ளது. இதைத் தொடர்ந்து, நாங்குநேரிக்கு நேரில் சென்று தலித் அறிவுசார் குழுமம் ஆய்வு செய்தது.
நாங்குநேரி சாதியக் கொடுமைக்கு தமிழக அரசியல் கலாச்சாரம் தான் என்று ஆணி வேர் என்று கூறுகிறார் தலித் அறிவுக் குழுமத்தின் ஒருங்கிணைப்பாளர் சி.லட்சுமணன். இது குறித்து ஈடிவி பாரத் செய்திக்கு அவர் பிரத்யேக பேட்டியளித்தார். அப்போது நாங்குநேரியில் தற்போதிய சூழல் எப்படி இருக்கிறது? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “நாங்கள் ஆய்வு சென்ற நிலையில் பல்வேறு கட்சிகளில் இருந்து பாதிக்கபட்ட சிறுவனை சந்தித்தனர். மேலும் தமிழ்நாடு அரசு சார்பாக அமைச்சர்கள், சபாநாயகர் அப்பாவு ஆகியோர் சந்தித்தனர்.
அப்பகுதி தலித் மக்கள் இன்னும் பயத்துடன் வாழ்ந்து வருகிறார்கள். அந்த பகுதியில் மாற்று சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த பகுதியில் தற்போது தலித் மக்கள் 100- குடும்பங்கள் மட்டும் தான் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் எண்ணிக்கையில் குறைவாக இருக்கிறார்கள். மேலும், அங்கு தலித் மக்கள் அனைவரும், பிறர்களை சார்ந்து தான் இருக்கிறார்கள். அந்த கிராமத்தில் அருகில் இருக்கும் பள்ளியில் யாரும் படிப்பததில்லை, அந்த பகுதி மக்கள் வள்ளியூர் பகுதியில் இருக்கும் ஒரு கிறிஸ்துவ பள்ளிக்குச் சென்று தான் படித்துக் கொண்டிருக்கிறார்கள்" என்றார்.
பாதிக்கப்பட்ட மாணவனின் மனநிலை எப்படி இருக்கிறது?: “அங்கு மொத்த கிராமமே பயத்தில் நடுங்கிக் கொண்டிருக்கிறது. குழந்தைகளின் மனநிலை மட்டும் எப்படி சாதரனாமாக இருக்கும். நாங்கள் மாணவனை பார்க்க முடியவில்லை, அன்றைய தினத்தில், அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டிருந்தனர். அதைத் தொடர்ந்து நாங்கள், சின்னதுரையின் சகோதரி மட்டும் அவர்களின் தாயாரை சந்தித்து பேசுகையில், அவர்கள் இன்னும் அந்த பயத்தோடு தான் இருக்கிறார்கள்” என்றார்.
பள்ளி மாணவர்களிடைய மனநிலை எப்படி இருக்கிறது?: “பள்ளியின், தாளாளரை சந்தித்துப் பேசினோம், பள்ளி தாளாளரை சந்தத்தில், அவர்கள் கூறியது, ‘இந்த பள்ளியில் நடுத்தர குடும்பத்தின் இருக்கும் மாணவர்கள் பயிலுகிறார்கள், அதேபோல், அனைத்து சமுதாயத்தையும் சார்ந்த மாணவர்களும் படிக்கிறார்கள். பள்ளியில் மாணவர்கள் கூறினால் மட்டுமே எங்களுக்கு தெரியும், இல்லையேனில் பள்ளி மாணவர்களிடைய இருக்கும் பிரச்னைகள் தெரியவருவது இல்லை’ என்கிறார்" என விளக்கமளித்தார்.
தென்மாவட்டங்களில் தொடரும் வன்முறைக்கு காரணம் என்ன?: “வன்முறை என்பது, எல்லா இடங்களிலும் இருக்கிறது. தலித்துகள் மீதான வன்முறை தமிழகம் முழுவதும் தான் இருக்கிறது. தென்மாவட்டங்களில் 90-களில் அதிகமாக இருந்தது, இதைத் தொடர்ந்து சமீப காலமாக குறைவாக இருந்தது, மீண்டும் அது தலைத் தூக்க ஆரம்பிக்கிறது. தலித் மக்களுக்கு தங்களின் வளர்ச்சி குறித்தும் கல்வி குறித்து விழிப்புணர்வு அதிகாமக வந்திருக்கிறது. அவர்களின் உரிமைகளை பெறுவதும் தான் சமூகத்தில் வளர்ச்சியாக இருக்கிறது. ஆனால், எதிரில் இருக்கும் மற்ற சாதியினர் அவர்களுக்கு எதிராக இருக்கிறார்கள்” என்றார்.
இந்த சூழலில், திராவிட இயக்கங்கள் நிலை என்னாவாக இருக்கிறது?, “நாங்குநேரியில் மட்டும் இந்த பிரச்னை இல்லை, தமிழகத்தில் எல்லாப்பகுதிகளிலும், இந்த பிரச்னை இருக்கிறது. இதற்கான ஆணி வேர் எங்கு இருக்கிறது, என்று பார்த்தால் அது, நிலவிய அரசியல் கலாசாரத்தில் தான். ஏன் அரசியல் கலாசாரம் என்றால் ஒரு ஜனநாயக நாட்டில் ஒரு அரசியல் கட்சி தான் அந்த நாட்டின் வளர்ச்சியை, சீர்திருத்தம், உட்கட்டமைப்பு என்று பல வகையில், அரசியல் கட்சி தான் பொறுப்பு.
இன்றைய சூழலில் இருக்கும் அரசியல் கட்சிகளுக்குள் உட்ஜனநாயகம் (Inner Democrazy) என்பது இல்லை. 50 வருடங்களாக, சமூக நீதி என்ற விழிப்புணர்வு பற்றி இல்லை. பெரியார் மண் என்று சொல்லும் இடத்தில் தான், இது போல சமூக நீதி பிரச்னையை நாம் தினமும் சந்தித்து வருகிறோம். அதிகார போதையில், தான் இருக்கும் கட்சியில், ஒரு சில சாதிகளின் கூடாராமக இருக்கிறது. திராவிட கட்சிகள் தனது குறைந்தபட்ச சித்தாந்தத்தை கூட பின்பற்றுவதில்லை” என தெரிவித்தார்.
விசாரணை கமிஷன் பற்றிய கருத்து என்ன?: தமிழகத்தில் தலித்துக்கு எதிராக நடைபெற்ற வன்கொடுமைகளுக்காக 50-க்கும் மேற்பட்ட விசாரணை கமிஷன்கள் அமைக்கபட்டன. ஆனால் தீர்வு என்பது இன்றைய வரை கேள்விக் குறியாக தான் இருக்கிறது. பெரும்பாலான அறிக்கை, சட்டப்பேரவையில் விவாதிக்கவும் இல்லை. விசாரணை எல்லாம் கண் துடைப்பு தான். ஏன், நீதிபதி சந்துரு, என் நெருங்கிய நண்பர் தான். அவர் அந்த பிரச்னையை வெளியில் கொண்டு வந்தாலும் அதை அரசு வெளயீடுமா என்பது தான் பிரச்னை.
அதேப்போல் தமிழகத்தில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அவர்கள் எடுக்கும் முடிவெல்லாம் தலித்களுக்கு எதிராக தான் இருந்துள்ளது. முதலில், வெளிப்படையாக பிராமன எதிர்ப்பு இருந்தது, மறைமுகமாக தலித் எதிர்ப்பு இருந்தது, தற்போது, வெளிபடையாகவே தலித் எதிரிப்பு இருக்கிறது.
தலித் மீதனா தமிழக அரசியல் பார்வை? என்ற கேள்விக்கு பதிலளித்து பேசிய அவர். “இங்கு அரசியல் தளம் தான் தமிழகத்தில் எல்லா விதமான சம்பவங்களுக்கும் முடிவு எடுக்கிறது. ஆனால், எடுக்கும் பொறுப்பில் இருக்கிறவர்கள் எல்லாம் தான் இருக்கும் சாதியை சார்ந்து இருக்கிறார்கள். மனோஜ் மேத்தா எழுதிய ‘caste pride - battle for democrazy and diginty’ அவர்கள் குறிப்பிடுவது, சுதந்திர இந்தியாவில், தமிழகம் தான் தலித்களுக்கு எதிரான வண்கொடுமைகளுக்கு மிகப்பெரிய திட்ட வரவை கொடுத்து இருக்கிறது. கீழ்வெண்மணி தான் தலித் வண்கொடுமைகளுக்கு வரையைரை கொடுத்தது என்று அந்த எழுத்தாளர் குறிப்பீடுகிறார்” என்றார்.
சாதியில் இருந்து எப்படி வெளியில் வருவது?: “சாதி என்பது, ஒரு மனநோய், அந்த மனநோய்க்கு மருந்து என்பது, ஜனநாயக உரையாடல் என்பது தேவை. சுயமரியாதை பற்றி விவரிக்க வேண்டும், சமூக நீதி என்பது, வரும் சாதி என்பது இட ஒதுக்கீடு சார்ந்தது இல்லை உணர்வு சார்ந்தது. சுயமரியாதை, சக மனிதனை எப்படி மதிப்பது தான். சாதியே ஒழிப்பாக்காக சாதியை முன்னெடுப்பது வேறு, சாதியை ஆதித்தத்தை நிலை நிறுத்துவற்கு அரசியல் செய்வது வேறு இறு அரசியலும் வேறு. இதில் புரிதல் இருக்க வேண்டும். பட்டியலின மக்கள் தான் பாதிக்கபட்ட வலியை, போர் கருவியாக மாற்றி கொண்டிருக்கிறார்கள். மேலும் இடக் ஒதுக்கீடை தவிர்த்து சாதியை தீண்டாமை வைத்து புரிந்து கொள்ள வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க: திமுக தலைவராக மு.க.ஸ்டாலினின் 5 ஆண்டு பயணம்.. கடந்து வந்ததும், கடக்கப் போவதும் என்ன..?