சென்னை: கடந்த 2016 முதல் 2019 வரையிலான நான்காண்டு அதிமுக ஆட்சியில், தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவினுக்கு பால் வழங்கும் விவசாயிகளுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசுகள் வழங்கப்பட்டன.
அவை அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டதாக தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், “சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்களிடம் ரூ.100 முதல் ரூ.150 வரை மட்டுமே மதிப்புள்ள பட்டாசுகளை, உற்பத்தியாளர்களிடம் சுமார் ரூ.400க்கு கட்டாயப்படுத்தி விற்பனை செய்திருக்கின்றனர்.
பட்டாசு விற்பனையால் ஆதாயம் பார்த்த அமைச்சர்
பட்டாசை வாங்க மறுத்த பால் உற்பத்தியாளர்களின், பால் விற்பனைத் தொகையில் பணம் பிடித்தம் செய்யப்பட்டிருக்கிறது.
இதன் மூலம் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பல கோடி ரூபாய் ஆதாயம் அடைந்துள்ளார். இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க: மேகதாது - அனைத்துக்கட்சி கூட்டம்