கரோனா பாதிப்பு காரணமாக வழக்கமான ரயில் சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டு சிறப்பு ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் திருவனந்தபுரம் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து வரும் 30ஆம் தேதி முதல் நாள்தோறும் டெல்லிக்கு சிறப்பு முன்பதிவு ரயில் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயில் தமிழ்நாட்டில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
மேலும், 30ஆம் தேதி காலை 11.15 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து புறப்படும் ரயில் மூன்று நாள்களுக்கு பிறகு நண்பகல் 1.45 மணிக்கு டெல்லி சென்றடையும். அதேபோல் அங்கிருந்து காலை 11.15 மணிக்கு புறப்பட்டு மூன்று நாட்களுக்குப் பிறகு மதியம் 3.15 மணிக்கு திருவனந்தபுரம் வந்தடையும். இந்த ரயிலில் மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டிகள், இரண்டாம் வகுப்பு ஏசி பெட்டிகள், படுக்கை வசதி கொண்ட பெட்டிகள், பொதுப் பெட்டிகள் உள்ளிட்டவை இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தற்போது நடைபெற்று வருவதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: மேலூர், கீழையூர் பெரியார் வைகை கால்வாயை இடிக்கத் தடை: அக். 7இல் இறுதி தீர்ப்பு