ETV Bharat / state

TN Cyber Crime: புதுசு புதுசா சைபர் கிரைம்.. தமிழகத்தில் ஒரே ஆண்டில் இத்தனை கோடி சுருட்டலா? - சைபர் கிரைம் போலீஸ் அதிர்ச்சி தகவல்

கடந்த ஓராண்டில் பல்வேறு சைபர் கிரைம் மோசடிகளில் சிக்கி ரூ.288 கோடி பொதுமக்கள் இழந்துள்ளதாக தமிழ்நாடு சைபர் கிரைம் போலீசார் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.

cybercrime scam
சைபர் கிரைம் மோசடி
author img

By

Published : May 9, 2023, 7:50 AM IST

சென்னை: தொழில்நுட்பம் வளர வளர புதிது புதிதாக சைபர் கிரைம் குற்றங்களும் தமிழ்நாட்டில் அரங்கேறி வருகிறது. குறிப்பாக கார்டு மேல உள்ள 10 நம்பர் மோசடியில் தொடங்கி ஓடிபி மோசடி, அமேசான் கூப்பன் மோசடி என பல முறைகளில் சைபர் கிரைம் மோசடிகள் நடந்தேறி வருகிறது.

இதனால் தமிழ்நாட்டில் ஆன்லைன் மூலமாக நடக்கக்கூடிய மோசடிகள் தொடர்பான புகார்களை மட்டுமே விசாரிப்பதற்காக பிரத்யேகமாக தமிழக சைபர் கிரைம் பிரிவு ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த ஓராண்டில் மட்டும் தமிழ்நாட்டில் சுமார் 60,000-க்கும் மேற்பட்ட சைபர் கிரைம் மோசடி புகார்கள் பொதுமக்களிடமிருந்து வந்துள்ளதாக தமிழக சைபர் கிரைம் பிரிவு தெரிவித்துள்ளது.

அதில், லோன் ஆப் மோசடி, லிங்க் மோசடி, ஓடிபி மோசடி, கே.ஒய்,சி மோசடி, டெலிகிராம் மோசடி, பேன் கார்டு மோசடி என பல்வேறு சைபர் கிரைம் மோசடிகளில் சிக்கி சுமார் 288 கோடி ரூபாய் இழந்துள்ளதாக தமிழக சைபர் கிரைம் போலீஸ் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. இந்த புகார்களில் சைபர் கிரைம் போலீசார் உடனடியாக வழக்குபதிவு செய்து மோசடி கும்பலுக்கு பணம் செல்லாத வகையில் 106 கோடி முடக்கி இருப்பதாகவும், 27 கோடி ரூபாய் உரியவரிடம் ஒப்படைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும், இந்தாண்டு ஜனவரி, பிப்ரவரி, மார்ச் ஆகிய 3 மாதங்களில் மட்டும் சுமார் 12,000 புகார்கள் பெறப்பட்டு, ரூ.67 கோடி மோசடியில் சிக்கி பொதுமக்கள் இழந்திருப்பதாகவும், அதில் 49 கோடி முடக்கி 6 கோடி ரூபாய் உரியவரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளது.

அதைத் தொடர்ந்து மோசடி லோன் ஆப், கே.ஒய்.சி, பேன் கார்டு, டெலிகிராம் டிரேடிங், பிரமோட்டிங் போன்ற ஆன்லைன் மோசடிகளில் மட்டுமே பெரும்பாலான பொதுமக்கள் சிக்கி பணத்தை இழந்திருப்பதாக புகார் வந்துள்ளதாகவும் தமிழக சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2 வருடங்களில் தொடர்ந்து சைபர் கிரைம் மோசடியில் ஈடுபட்டதாக 29 பேரை குண்டர் சட்டத்தின் கீழ், சிறையில் அடைத்துள்ளதாகவும், அதுமட்டுமின்றி பெரும்பாலான மோசடி கும்பல் போலி முகவரி மூலமாக சிம் கார்டு பெற்று சைபர் கிரைம் மோசடி செயலிலும், தீவிரவாத செயலிலும் ஈடுபடுவதால் குற்றவாளிகளை கண்டறிவறில் சிக்கல் ஏற்படுகிறது. ஆகையால் உடனடியாக சிம் கார்டுகளை முடக்கும் நடவடிக்கைகளில் உள்துறை அமைச்சகம் மற்றும் தொலைதொடர்பு துறையுடன் இணைந்து தமிழக சைபர் கிரைம் போலீசார் செயல்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் கடந்த 1.5 மாதத்தில் மட்டும் 27,905 போலி சிம்கார்டுகளை முடக்குமாறு பரிந்துரை கடிதம் எழுதி இருப்பதாகவும், அதில் 22,440 சிம்கார்டுகள் முடக்கி இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், ஒரு நாளைக்கு 1930 ஹெல்ப்லைன் மூலமாக 600 கால்கள் வருவதாகவும், இந்த வருடத்தில் 221 மோசடி ஆன்லைன் லோன் ஆப் மற்றும் 49 போலி வலைதளம், லிங்கை முடக்கி இருப்பதாக தெரிவித்துள்ளது.

மேலும், சைபர் மோசடி செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளை மட்டுமே கண்டறியாமல், பொதுமக்கள் இழந்த பணத்தை மீட்டு கொடுப்பதிலே தமிழக சைபர் கிரைம் போலீசார் முக்கிய பங்காற்றி வருவதாக தெரிவித்துள்ளனர். அந்த வகையில் சைபர் கிரைம் மோசடிகளை உடனக்குடன் கண்டறிய தமிழக சைபர் கிரைம் போலீசின் வளர்ச்சிக்காக 9.28 கோடி ரூபாய் அரசு ஒதுக்கி இருப்பதாகவும், 16 அதிநவீன இயந்திரம் வாங்க 23 கோடி ரூபாய் டெண்டர் விடப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: kerala Boat Accident : கேரள படகு விபத்து - படகின் உரிமையாளர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.