கடலூர் மாவட்டம் தென்னம்பாக்கம் கிராமத்தில் முன்னூறு வருடத்திற்கு முன்பு அழகுமுத்து சித்தர் என்பவர் இந்தக் கிராமத்திற்கு வந்து சென்றதாகக் கூறப்படுகிறது. அவர், இங்குள்ள அய்யனார் ஆலயத்தில் தங்கி பொதுமக்களுக்கு உபதேசம் செய்ததால் பின்னாளில் அந்த ஆலயம் அழகுமுத்து அய்யனார் ஆலயம் என அழைக்கப்படுகிறது.
இந்த ஆலயத்திற்கு வரும் பக்தர்களின் பிரார்த்தனைகள் வெற்றிபெற்றால் நேர்த்திக்கடனாக சிமெண்ட் பொம்மைகளை காணிக்கையாக வைப்பது வழக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில், அழகுமுத்து அய்யனார் ஆலயத்தைச் சுற்றி ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட சிமெண்ட் பொம்மைகள் காணப்படுகின்றன. சிமெண்ட் பொம்மைகள் கொண்ட அழகுமுத்து அய்யனார் ஆலயத்திற்கு வெளிநாட்டினரும் வந்து செல்கின்றனர்.
இதுகுறித்து கோயிலில் சேவை செய்துவரும் முதியவர் கோதண்டபாணி கூறுகையில், மக்களின் நம்பிக்கையின் காரணமாக உருவங்கள் வடிவமைக்கப்பட்டு 300 ஆண்டுகளாக சிமெண்ட் பொம்மைகள் வைக்கப்பட்டு வருகிறது.
இக்கிராம மக்கள் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றனர். இந்த ஆலயத்தில் உயிர் பலி கிடையாது என்று தெரிவித்தார்.