மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு வாரியத்தின் செயலாளரும், இயக்குநருமான அனுராக் திரிபதி செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்புவரை பயிலும் மாணவர்களுக்கு பாடம் நடத்துவதற்கு தாள் ஒன்றும், 6 முதல் 8ஆம் வகுப்புவரை பாடம் நடத்த தாள் இரண்டிலும் ஆசிரியர்கள் தகுதிபெற வேண்டும்.
மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு 110 நகரங்களில் கடந்த 8ஆம் தேதி நடைபெற்றது. இந்த ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதுவதற்கு 28 லட்சத்து 32 ஆயிரத்து 120 பேர் பதிவுசெய்திருந்தனர். அவர்களில் 8ஆம் தேதி நடைபெற்ற தேர்வை 24 லட்சத்து ஐந்து ஆயிரத்து 545 பேர் எழுதினர். இவர்களில் தாள் ஒன்றினை 14 லட்சத்து 13 ஆயிரத்து 390 பேரும், தாள் இரண்டினை ஒன்பது லட்சத்து 91 ஆயிரத்து 755 பேரும் எழுதினர்.
இவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று (டிச.27 ) https://ctet.nic.in அல்லது cbse.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டன. தேர்வு எழுதியவர்களில் ஐந்து லட்சத்து 42 ஆயிரத்து 285 பேர் தகுதிபெற்றுள்ளனர். அவர்களில் தாள் ஒன்றில் இரண்டு லட்சத்து 47 ஆயிரத்து 386 பேரும், தாள் இரண்டில் இரண்டு லட்சத்து 94 ஆயிரத்து 899 பேரும் என 22.55 சதவிகிதம் பேர் தகுதிபெற்றுள்ளனர். இவர்களில் மூன்று லட்சத்து 12 ஆயிரத்து 558 ஆசிரியைகளும், இரண்டு லட்சத்து 29 ஆயிரத்து 718 ஆசிரியர்களும் தகுதிபெற்றுள்ளனர்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பொறுப்பில்லாத ஆசிரியர், நடவடிக்கை எடுக்க கிராம மக்கள் கோரிக்கை!