ETV Bharat / state

சென்னையில் ஐபிஎல் டிக்கெட் விற்பனை தொடக்கம்.. அலைமோதும் ரசிகர்கள்!

author img

By

Published : Mar 27, 2023, 12:17 PM IST

15வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கிய நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

Etv Bharat
Etv Bharat

சென்னை: 15வது ஐபிஎல் போட்டி வருகின்ற மார்ச் 31ஆம் தேதி தொடங்குகிறது. இதில் குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் (GT VS CSK) மோதுகின்றனர். சென்னையில் ஏப்ரல் 3ஆம் தேதி நடைபெறும் ஐபிஎல் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை இன்று (மார்ச் 27) காலை முதல் தொடங்கியது. ஐபிஎல் டிக்கெட்டுகளை வாங்க இரவிலிருந்தே சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர்கள் குவிந்தனர்.

சென்னையில் நடைபெறும் போட்டியில் ரூ.1,500, ரூ.2000, ரூ.2500, ரூ.3,000 வரை டிக்கெட்டுகள் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் நான்கு வகையான கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு கேலரிகள் பிரிக்கப்பட்டுள்ளன. சமீபத்தில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தின் தலைவராக அசோக் சிகாமணி பதவியேற்றார். அதன் பின்னர், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பல கட்டுமான, பராமரிப்பு வேலைப்பாடுகள் நடைபெற்றன. இதில் 38,000 இருக்கைகள் கொண்ட புதிய கேலரி ஒன்று அமைக்கப்பட்டது. இதில், தற்போது நடைபெறும் ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனைக்கு 27,000 இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 11,000 இருக்கைகள் கிளப் உறுப்பினர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

முழுவதும் மஞ்சள் நிறத்தில் வந்த சிஎஸ்கே ரசிகர்

கடந்த சில நாட்களுக்கு முன்பாக இந்தியா, ஆஸ்திரேலியா இடையேயான ஒருநாள் போட்டி இங்கு நடைபெற்றது. நீண்ட ஆண்டுகள் கழித்து சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போட்டி என்பதால் ரசிகர்கள் இரவு முழுவதும் காத்திருந்து அதிகாலையில் டிக்கெட் வாங்கு சென்று போட்டியை கண்டு கழித்தனர். தற்போது சர்வதேச போட்டிக்கு இணையாக ஐபிஎல் டிக்கெட் வாங்குவதற்கு ரசிகர்கள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் குவிந்து வருகின்றனர். இந்தியா, ஆஸ்திரேலியா இடையேயான போட்டியின் போது, கூட்டம் அதிகமாக இருந்ததால், "பெண்களுக்குத் தனியாக வரிசை அமைக்க வேண்டும்" என பெண்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால், அதன்படி பெண்களுக்குத் தனி வரிசை அமைக்கப்படவில்லை.

சற்று நேரத்தில் விற்றுத்தீர்ந்த டிக்கெட்டுகள்!

மூன்று ஆண்டுகளுக்கு பின் சென்னையில் 7 லீக் போட்டிகள் கொண்ட ஐ.பி.எல். போட்டிகள் நடைபெற உள்ளன. சென்னை சூப்பர் சிங்ஸ் அணி தலைவர் தோனி, மஞ்சள் கலர் டி-சர்ட் அணிவதை பார்ப்பதற்கும், விசில் போடுவதற்கும் ரசிகர்கள் காத்திருக்கிறனர். ரூ.1500, ரூ.2000, ரூ.2500 டிக்கெட்களை ஆன்லைனில் மூலமாகவும் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. காலை 9:30 முதல் 'சென்னை சூப்பர் கிங்ஸ்' என்ற இணையதளத்தில் டிக்கெட் பதிவு செய்யலாம் எனக் கூறப்பட்ட நிலையில் தற்போது, "அந்த இணையதளத்தில் சற்று நேரத்தில் டிக்கெட் முடிந்துவிட்டது" என்று காட்டுவதாக ரசிகர்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

இதையும் படிங்க: அரசு விழாவில் பில்கிஸ் பானு பலாத்கார வழக்கு குற்றவாளி - பாஜக எம்பி, எம்எல்ஏ இருக்கும் புகைப்படம் வைரல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.