ETV Bharat / state

நாளை முதல் லாக்டவுன்... மதுபானங்களை வாங்கி குவிக்கும் மதுப்பிரியர்கள்! - corona virus

சென்னை: இன்று இரவு 12 மணி முதல் ஜூன் 30ஆம் தேதி வரை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளதால், மதுபானக் கடைகளில் மதுப்பிரியர்கள் அதிகளவில் குவிந்துள்ளனர்.

crowd
http://10.10.50.85:6060/reg-lowres/18-June-2020/tn-che-02-tasmac-crowd-visual-script-7208368_18062020152912_1806f_1592474352_84.mp4
author img

By

Published : Jun 18, 2020, 5:36 PM IST

தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக, சென்னையில் கரோனா தொற்று பாதிப்பு மின்னல் வேகத்தில் அதிகரித்துவருகிறது. தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதேபோல், சென்னையை ஒட்டியுள்ள மாவட்டங்களிலும் தொற்று பரவல் அதிகளவில் உள்ளதால் மாநில அரசு, இன்று இரவு 12 மணி முதல் ஜூன் 30ஆம் தேதிவரை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்த உத்தரவிட்டுள்ளது. அத்தியாவசிய பொருள்கள் விற்பனை செய்யும் கடைகளுக்கே மதியம் 2 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கியுள்ளது.

crowd
கடைக்கு முன்பு குவிந்த மதுப்பிரியர்கள் கூட்டம்

இதனால், மேற்கொண்ட மாவட்டங்களில் மதுபானக் கடைகள் மூடப்படும் அச்சத்தால் மதுக்கடைகளுக்கு முன்பு மதுப்பிரியர்கள் அதிகளவில் குவிந்துள்ளனர். மேலும், சரக்குகளை அதிகளவில் வாங்கி பைகளில் அடைத்து வருகின்றனர். இச்சமயத்தை பயன்படுத்தி மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பதாகவும், மதுப்பிரியர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

கரோனா தொற்று அதிகம் பரவும் இந்த நேரத்தில் தகுந்த இடைவெளியை கடைப்பிடிக்காமல் மது பாட்டில்கள் வாங்க ஒருவருக்கு ஒருவர் முந்திக்கொண்டு சென்றதால், மற்றவர்களுக்கும் கரோனா பரவும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. அவ்வப்போது பாதுகாப்பு பணியிலிருக்கும் காவலர்கள், கும்பலாக குவியும் மதுப்பிரியர்களை லட்டியால் அடித்தும் விரட்டி வருகின்றனர்.

இதையும் படிங்க:கூட்டம் கூட்டமாக சென்னையிலிருந்து வெளியேறும் மக்கள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.