தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விவசாயிகளின் கடன் சுமையை குறைக்கும் வகையில் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற ரூ.12,110 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என கடந்த 5ஆம் தேதி நடந்த சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி அறிவித்திருந்தார். விவசாயிகள் நகைக்கடன் பெற்றிருந்தாலும் அவை தள்ளுபடி செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில், கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி செய்வதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, 16 லட்சத்து 43 ஆயிரத்து 347 விவசாயிகளின் கடன் நிலுவைத் தொகை ரூ.12,110 கோடி தள்ளுபடி செய்யப்படுகிறது.
இத்திட்டத்தை செயல்படுத்த தேவையான நிதி அரசால் கூட்டுறவு வங்கிகளுக்கு வழங்கப்படும் என்றும் இத்திட்ட செயலாக்கம் தொடர்பான விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் தனியே வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: அதிமுகவை கதிகலங்க வைக்கிறதா சசிகலா வருகை?