ETV Bharat / state

உணவு வழங்குபவரை தேடி சென்ற மாட்டிற்கு கிடைத்த அதிர்ச்சி! - உணவு வழங்குபவர் இறப்பு

சென்னை: தினமும் உணவு வழங்குபவர் வராததால், அவரை தேடி சென்ற மாட்டிற்கு கிடைத்த அதிர்ச்சி சம்பவம் அனைவரையும் நெகிழவைத்துள்ளது.

death
author img

By

Published : Jun 28, 2019, 11:38 PM IST

சென்னை வேப்பம்பட்டில் வசித்து வருபவர் கங்காராம். இவருக்கு விலங்குகள், கால்நடைகள் வளர்ப்பு மீது ஆர்வம் அதிகம். அனைத்து உயிர்கள் இடத்திலும் பற்றுக் கொண்டவர். சமூக ஆர்வலரான இவர் தினமும் அக்கம் பக்கத்தில் இருக்கும் மாட்டிற்கு உணவாக கீரை, ரொட்டி உள்ளிட்டவை சாப்பிடுவதற்கு கொடுப்பார்.

அவரது வீட்டிற்கு அருகில் தினமும் அவர் தரும் உணவிற்காகவே மாடுகள் வருவது வழக்கமாகி விட்டது. இந்நிலையில், கங்காராம் உடல்நிலை குறைவால் நேற்று உயிரிழந்துள்ளார். இதனை அறியாத மாடு ஒன்று அவர் தினமும் உணவு வழங்குவார், இன்று உணவு கொடுக்கவில்லை என்று கங்காராமை தேடி அவரது வீட்டிற்கே வந்துள்ளது. பின்னர் அவர் உயிரிழந்தது அறிந்ததும், மயானத்தில் அவரை அடக்கம் செய்து உடல் எரிந்து முடியும் வரை அந்த இடத்தை விட்டு நகராமல் அங்கேயே படுத்திருந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இச்சம்பவம் பார்ப்பவர் அனைவரையும் நெகிழவைத்துள்ளது.

Intro:Body:

சென்னை வேப்பம்பட்டில் வசித்து வந்த கங்காராம் தினமும் தன் வீட்டிற்கு வரும் மாடுகளுக்கு கீரை மற்றும் ரொட்டிகளை கொடுத்து வந்தார். அவர் திடீர் என்று 27/6/19 காலையில் இறந்துவிட்டார். 

வழக்கம்  போல மாடு வந்து அவரை தேடி அங்கேயே உட்கார்ந்து விட்டது. அவருடைய இறுதி ஊர்வலத்திலும் உடன் சென்று மயானத்தில் அவருடைய உடல் எரியுட்டப்பட்ட இடத்திற்கு அருகில் அமர்ந்து முழுவதும் எரிந்த பிறகே அங்கிருந்து சென்றது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.