ETV Bharat / state

திருவல்லிக்கேணியில் மாடு முட்டி முதியவர் படுகாயம்… சாலையில் சுற்றித் திரியும் மாடுகளை பிடிக்க மக்கள் கோரிக்கை!

சென்னை திருவல்லிக்கேணியில் பகுதியில் இன்று காலை மாடு முட்டி படுகாயம் அடைந்த முதியவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

திருவல்லிக்கேணியில் மாடு முட்டி முதியவர் படுகாயம்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 18, 2023, 6:58 PM IST

திருவல்லிக்கேணியில் மாடு முட்டி முதியவர் படுகாயம்

சென்னை: சாலைகளில் மாடுகள் சுற்றி திரிந்தால் அதன் உரிமையாளர்கள் மேல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தார். ஆனாலும் இதற்கு செவி கொடுக்காத மக்கள் தங்களது மாடுகளை சாலையில் சுற்றித் திரிய விடுகின்றனர். இதனை அதிகாரிகளும் அவ்வப்போது கண்டுகொள்ளாமல் விடுகின்றனர்.

இந்த நிலையில் சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் அருகே இன்று காலை சுமார் 6.30 மணி அளவில் சாலையில் நடந்து சென்ற 80 வயது சுந்தரம் என்ற முதியவரை, அப்பகுதியில் சுற்றித்திரிந்த மாடுகள் முட்டி தூக்கி வீசியதில் அவர் படுகாயம் அடைந்துள்ளார். இதையடுத்து அப்பகுதியில் இருந்தவர்கள் முதியவரை மீட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும் இதே பாரத்தசாரதி கோயில் அருகே உள்ள மாதா தெருவில் கடந்த 4ஆம் தேதி இதே போன்று சாலையில் சுற்றித் திரிந்த மாடுகள் சுமார் நான்கு பேரை முட்டி தூக்கி வீசியது. அப்போது சென்னை மாநகராட்சி அதிகாரிகள் நேரடியாக சம்பவ இடத்திற்கு சென்று சாலையில் சுற்றித்திரிந்த மாடுகளை பிடித்து உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து கடுமையான எச்சரிக்கை விடுத்தனர்.

அதன் பிறகு மீண்டும் சாலையில் மாடுகள் சுற்றித் திரிவது வாடிக்கையாகி வருகிறது. இது குறித்து புகார்கள் அளித்தாலும் மாநகராட்சி அதிகாரிகள் அலட்சியமாக செயல்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் இது குறித்து ஐஸ் ஹவுஸ் போலீசார் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி சாலையில் சுற்றித்திரிந்த மாடுகள் யாருடையது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரே மாதத்தில் சாலையில் சுற்றித் திரிந்த மாடுகள் மூன்று முறை பொது மக்களை முட்டி தூக்கி வீசிய சம்பவங்கள் நடைபெற்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு நிரந்தரமாக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர். இதனை தொடர்ந்து மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் மாடு முட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதியவரை பார்வையிட்டு ஆறுதல் கூறி சிறப்பான சிகிச்சை அளித்திட மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து திருவல்லிக்கேணி பகுதியில் சுற்றித் திரியும் மாடுகளைப் பிடித்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டதைத் தொடர்ந்து, அப்பகுதியில் ஐந்து மாடுகள் பிடிக்கப்பட்டு அதன் உரிமையாளர்களுக்கு தலா 5 ஆயிரம் வீதம் அபராதம் விதிக்கப்பட்டது. இன்று காலை நடைபெற்ற சம்பவத்தில், முட்டிய மாட்டின் உரிமையாளர் மீது உரிய சட்டப் பிரிவின் கீழ் காவல் நிலையத்தில் வழக்கு பதிந்து நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

  • விபத்துகளை தடுக்க மாடுகளை கட்டிப்போட்டு வைக்கும்படி, மாட்டு உரிமையாளர்களுக்கு சென்னை மாநகராட்சி ஆணையர் அறிவுறுத்தல்.
    மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.#ChennaiCorporation | #HereToServe
    Video credits: @AishRavi64 @THChennai pic.twitter.com/GuEFM27kTT

    — Greater Chennai Corporation (@chennaicorp) October 18, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

சென்னை மாநகராட்சியில் இந்த ஆண்டில் இதுவரை 3737 மாடுகள் பிடிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது‌. தெருக்களில் அத்துமீறி நடமாட விடும் மாடுகள் கைப்பற்றப்பட்டு அபராதம் விதிக்கப்படுவதுடன், உரிமையாளர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுககப்படும் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: சிவகாசி வெடி விபத்து: "அரசு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்குக" - கே.எஸ். அழகிரி கோரிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.