தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், தொடர்ந்து அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் தமிழ்நாட்டிற்குக் கூடுதலாக தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என மத்திய அரசிடம் தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்தது.
மத்திய அரசின் உத்தரவின் பேரில், புனேவில் உள்ள மத்திய மருந்து சேமிப்பு கிடங்கில் இருந்து கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசி மருந்துகள் தமிழ்நாட்டிற்கு அனுப்பப்பட்டு வருகிறது. இதையடுத்து, மும்பையிலிருந்து விமானம் மூலம் 2 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் இன்று சென்னை கொண்டு வரப்பட்டன.
தடுப்பூசி மருந்துகளை சுகாதாரத் துறை அலுவலர்கள் பெற்றுக்கொண்டனர். இதையடுத்து குளிர்சாதன வாகனம் மூலம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள மாநில தடுப்பூசி சேமிப்பு மையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பிவைக்கப்படும் என அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, இன்று காலை ஹைதராபாத்திலிருந்து 75 ஆயிரம் கோவாக்சின் தடுப்பூசி சென்னை வந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஹைதராபாத்திலிருந்து சென்னை வந்த கோவாக்சின் தடுப்பூசிகள்