ETV Bharat / state

மேலும் 151 பேருக்கு கரோனா பாதிப்பு - பொது சுகாதாரத்துறை இயக்குநரகம் - Covid cases in tamilnadu

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 151 நபர்களுக்குத் தொற்றுப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத்துறை இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

மேலும் 151 பேருக்கு கரோனா பாதிப்பு - பொது சுகாதாரத்துறை இயக்குநரகம்

author img

By

Published : Mar 8, 2022, 8:54 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 151 நபர்களுக்குத் தொற்றுப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 2,145 எனக் குறைந்துள்ளது.

151 பேருக்கு கரோனா

பொது சுகாதாரத்துறை இயக்குநரகம் மார்ச் 8ஆம் தேதி வெளியிட்டுள்ள புள்ளி விவரத் தகவலில், 'தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் புதிதாக 40 ஆயிரத்து 745 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் தமிழ்நாட்டில் இருந்த 150 நபர்களுக்கும், மேற்கு வங்கத்திலிருந்து தமிழ்நாடு வந்த ஒருவர் உட்பட 151 நபர்களுக்கு கரோனா தொற்றுப் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், தமிழ்நாட்டில் இதுவரை 6 கோடியே 36 லட்சத்து 20 ஆயிரத்து 105 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் 34 லட்சத்து 51 ஆயிரத்து 322 நபர்களுக்குக் கரோனா வைரஸ் தொற்றுப்பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் தற்பொழுது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 2,145 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு

மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நோயாளிகளில் குணமடைந்த 418 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 34 லட்சத்து 11 ஆயிரத்து 158 என உயர்ந்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் தனியார் மருத்துவமனையில் இரண்டு நோயாளிகள் சிகிச்சைப் பலனின்றி இறந்துள்ளனர். இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 38 ஆயிரத்து 19 என உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் அரியலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கரோனா வைரஸ் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் ஒருவர் கூட தற்போது சிகிச்சையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது’ எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:உக்ரைனில் இருந்து உடனே... உடனே வெளியேறவும் - இந்தியத் தூதரகம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.