சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் பொதுமக்களுக்கும், மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கும் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் ஒரு பகுதியாக, மெட்ரோ ரயிலில் பயணம் செய்வது எவ்வளவு பாதுகாப்பானது என்பதை பயணிகளுக்கு தெரிவிக்கும் வகையில் மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் மெட்ரோ ரயில்களில் கரோனா பரவல் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளது.
அதன் தொடர்ச்சியாக, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் 'ஆன் தி ஸ்டீரிட் ஆப் சென்னை' அமைப்புடன் இணைந்து இன்று (டிச.26) சென்ட்ரல் மெட்ரோ, விமான நிலையம், திருமங்கலம் மற்றும் ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையங்களில் (தெரு நிலை) மெல்லிசை கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனை பொதுமக்கள், மெட்ரோ பயணிகள் இந்நிகழ்ச்சியை மகிழ்ச்சியுடன் கண்டு களித்தனர். அதேபோன்று நாளை (டிச.27) மாலை 6.30 மணி முதல் 8.30 வரை திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தில் நிமிர்வு கலையகம் அமைப்பின் பறையிசை நிகழ்ச்சியும், ஆன் தி ஸ்டீரிட் ஆப் சென்னை கலைக்குழுவினரின் மெல்லிசை நிகழ்ச்சியும் நடைபெறும் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் பண்டிகை கால சிறப்பு ரயில்கள் சேவை நீட்டிப்பு