ETV Bharat / state

எடப்பாடி பழனிசாமியின் மனைவிக்கு கரோனா தொற்று

மனைவிக்கு கரோனா தொற்று உறுதியான நிலையில், எடப்பாடி பழனிசாமி தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார்.

எடப்பாடி பழனிசாமியின் மனைவிக்கு கரோனா தொற்று
எடப்பாடி பழனிசாமியின் மனைவிக்கு கரோனா தொற்று
author img

By

Published : Jun 28, 2022, 11:03 PM IST

சென்னை: தமிழ்நாடு முழுவதும் கரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. இதனைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். சில நாட்களுக்கு முன்னர் தமிழ்நாட்டில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில், முன்னதாகவே எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் உதவியாளர்களுக்குக் கரோனா தொற்று உறுதியானதாக தகவல் வெளியான நிலையில், தற்போது அவரது மனைவி ராதாவிற்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் எடப்பாடி பழனிசாமியும், அவரது மனைவி ராதாவும் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளனர்.

அதிமுகவில் ஒற்றைத்தலைமை விவகாரம் உச்சம் அடைந்துள்ள நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் தொடர்ந்து தங்களது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வந்தனர்.

வரும் ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழு கூட்டத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமி தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பாஜகவில் இணைகிறாரா ஓ.பி.எஸ்?…: முன்னாள் அமைச்சர் வளர்மதி அதிரடி பேட்டி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.