ETV Bharat / state

கரோனாவால் சென்னையில் 4 பேர் மரணம்: அதிகரிக்கும் இறப்பு எண்ணிக்கை!

சென்னை : கரோனா வைரஸ் (தீநுண்மி) பெருந்தொற்று பாதிப்பு காரணமாக நேற்று ஒரேநாளில் நான்கு பேர் உயிரிழந்துள்ளது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Covid-19 Threat Increased deaths in Chennai
கோவிட்-19 பாதிப்பால் 4 பேர் மரணம் - சென்னையில் அதிகரிக்கும் இறப்பு எண்ணிக்கை!
author img

By

Published : May 9, 2020, 2:09 PM IST

சென்னையில் ஒரேநாளில் பல்வேறு நபர்கள் மூச்சுத்திணறல், கரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் கரோனா தீநுண்மி வேகமாகப் பரவிவருகிறது. குறிப்பாக, சென்னையில் அதன் பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து விஸ்வரூபம் எடுத்துவருகிறது. இதுவரை மூன்றாயிரத்து 46 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளதாகச் சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

இந்தப் பரவலைத் தடுக்க மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இருப்பினும் நோய்த்தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் இறப்பு எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், கரோனா தீநுண்மி பெருந்தொற்றுநோயின் பாதிப்பு காரணமாக சென்னையின் பல இடங்களில் நேற்று ஒரேநாளில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

புளியந்தோப்பு

சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த 64 வயதுடைய மூதாட்டி ஒருவர் கடந்த 1ஆம் தேதியன்று காய்ச்சல் காரணமாக சிகிச்சைக்காக ராஜிவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், கரோனா பரிசோதனைசெய்யப்பட்டு இவருக்கு தொற்று இருப்பது உறுதியானது. இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி அவர் நேற்று உயிரிழந்தார்.

வடக்கு மலையம்பாக்கம்

சென்னை வடக்கு மலையம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 60 வயது மூதாட்டி, குன்றத்தூர் பகுதியில் உள்ள அங்கன்வாடியில் பணிபுரிந்துவந்தார். இந்த நிலையில் நேற்று அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதன் காரணமாக பூந்தமல்லி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச்செல்லப்பட்டார்.

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாகவும், மேலும் அவருக்கு கரோனா நோய்தொற்று இருக்க வாய்ப்பு இருப்பதாகக் கூறியதை அடுத்து மாங்காடு காவல் துறையினர் அவரது உடலைக் கைப்பற்றி கே.எம்.சி. மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு அனுப்பிவைத்தனர்.

சேலையூர்

சேலையூர் பகுதியைச் சேர்ந்த 53 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவருக்கு நேற்றிரவு மூச்சுத்திணறல் அதிகமாக ஏற்பட்டதால் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்குப் பரிசோதனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் முன்னதாகவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். மேலும், உயிரிழந்தவரின் உடலை கரோனா பரிசோதனைக்காகக் கொண்டுசென்றுள்ளனர்.

தேனாம்பேட்டை

சென்னை தேனாம்பேட்டை காமராஜர் சாலை சேர்ந்த 61 வயது மூதாட்டிக்கு அதிக மூச்சுத்திணறல் ஏற்பட்டதின் காரணமாக ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அவரது உறவினர் அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில், திடீரென உடல்நிலை கவலைக்கிடமாகி உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை அலுவலர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

ஜாபர்கான்பேட்டையில் ஒருவர் தலைமறைவு

சென்னை ஜாபர்கான் பேட்டை பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் இவருக்கு நேற்று இரவு வயிற்று வலி ஏற்பட்டதால் ராயப்பேட்டை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகச் சென்றுள்ளார். அப்போது பரிசோதித்த மருத்துவர்கள் இவருக்கு கரோனா தொற்று இருக்க வாய்ப்பு உள்ளதாகக் கூறி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர். ஆனால், அந்த நபர் மருத்துவமனைக்குச் செல்லாமல், தலைமறைவாகிவிட்டார். மேலும் இவரது செல்போனை அணைத்துவைத்துள்ளார்.

ஜாபர்கான்பேட்டை பகுதி முழுமையாகத் தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Covid-19 Threat Increased deaths in Chennai
கோவிட்-19 பாதிப்பால் நான்கு பேர் மரணம் - சென்னையில் அதிகரிக்கும் இறப்பு எண்ணிக்கை!

இதையும் படிங்க : ஊரடங்கு மீறல்: சுமார் 4 கோடியே 74 லட்சம் ரூபாய் வசூல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.