ETV Bharat / state

ஹைதராபாத்திலிருந்து சென்னை வந்தடைந்த 1.19 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகள்!

சென்னை: ஹைதராபாத்திலிருந்து விமானம் மூலம் ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 20 கோவாக்சின் கரோனா தடுப்பூசி மருந்துகள் சென்னை விமான நிலைய வந்தடைந்தன.

ஹைதராபாத்தில் இருந்து சென்னை வந்தடைந்த 1.19 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகள்!

author img

By

Published : Jun 15, 2021, 12:20 PM IST

தமிழ்நாட்டில் கரோனா தொற்று காரணமாகத் தொடர்ந்து அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுவருகிறது. அந்த வகையில் பாரத் பயோடெக் நிறுவனத்தால் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசியும், சீரம் நிறுவன தயாரிப்பில் உருவாக்கப்பட்ட கோவிஷீல்டு தடுப்பூசியும் பயன்படுத்தப்பட்டுவருகின்றன.

தமிழ்நாட்டில் பல பகுதிகளில் தடுப்பூசிகள் தட்டுப்பாடுகள் ஏற்பட்டதையடுத்து உடனடியாக தமிழ்நாட்டிற்குக் கூடுதலாகத் தடுப்பூசிகள் வழங்க வேண்டும் எனத் தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசிடம் வலியுறுத்தியது.

இந்நிலையில் ஹைதராபாத்திலிருந்து புளூ டார்ட் விமானம் மூலம் 24 பார்சல்களில் ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 20 கோவாக்சின் தடுப்பூசி மருந்துகள் சென்னை விமான நிலையம் வந்தடைந்தன.

1.19 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகள்
1.19 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகள்
தடுப்பூசி மருந்துகளைப் பெற்றுக்கொண்ட சுகாதாரத் துறை அலுவலர்கள் சென்னை விமான நிலையத்திலிருந்து குளிர்சாதன வாகனம் மூலம் சென்னை DMS வளாகத்தில் உள்ள மாநில தடுப்பூசி சேமிப்பு மையத்திற்குக் கொண்டுசெல்ல உள்ளனர்.

இதையும் படிங்க: 'பிரைவசிக்கு முக்கியத்துவம்' - ஐபேட் ஓஎஸ்15இன் சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.