ETV Bharat / state

அகற்றப்படும் சீமைக்கருவேல மரத்திற்குப்பதில் நாட்டு மரங்களை நட நீதிமன்றம் அறிவுரை - ஊரக வளர்ச்சித் துறை

சுற்றுச்சூழல் சமநிலையைப் பாதுகாக்கும் வகையில், அகற்றப்படும் சீமைக்கருவேல மரங்களுக்கு இணையாக நாட்டு மரங்களை நடவேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

அகற்றப்படும் சீமைக்கருவேல மரத்திற்கு பதில்  நாட்டு மரங்களை நட நீதிமன்றம் அறிவுரை

author img

By

Published : Nov 2, 2022, 10:34 PM IST

சென்னை: தமிழ்நாடு முழுவதும் சீமைக்கருவேல மரங்களை அகற்றக்கோரி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் தாக்கல் செய்திருந்த வழக்குகள், நீதிபதிகள் சதீஷ் குமார் மற்றும் பரதச்சக்கரவர்த்தி அமர்வில் இன்று(நவ.2) மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது வனத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை தரப்பில் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன. வனத்துறை தாக்கல் செய்த அறிக்கையில், வனப்பகுதியில் 1,325 ஹெக்டேர் பரப்பில் சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்துள்ளதாகவும், நபார்டு திட்டத்தின் கீழ் அவற்றை அகற்ற திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 281 ஹெக்டேர் அகற்றப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள இடங்களில் ஓராண்டு காலத்தில் அகற்றப்படும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஊரக வளர்ச்சித்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், கிராமப் பஞ்சாயத்துக்களுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அப்புறப்படுத்துவதற்கான விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளதாகவும், 45 லட்சம் ரூபாய் செலவு செய்து மரங்கள் அகற்றப்பட்டுள்ளதாகவும், அந்த மரங்களை ஏலம் விட்டு அதன் மூலம் வருவாய் ஈட்ட ஏதுவாக மாவட்டம்தோறும் குழுக்கள் அமைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

ஊரக வளர்ச்சித்துறை அறிக்கைக்குப் பாராட்டுத் தெரிவித்த நீதிபதிகள், சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டு ஏலம் விடுவது தொடர்பான குழுவை 15 நாட்களில் அமைக்க உத்தரவிட்டனர்.

மேலும், சுற்றுச்சூழல் சமநிலையைப் பாதுகாக்கும் வகையில், அகற்றப்படும் சீமைக்கருவேல மரங்களுக்கு இணையாக நாட்டு மரங்களை நட வேண்டும் என அரசுக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், இப்பணியை பசுமை தமிழ்நாடு திட்டத்தின்கீழ் சேர்க்க வேண்டும் எனவும், நீர்நிலைகளில் ஒரு லட்சத்து 19 லட்சம் ஹெக்டேர் பரப்பில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களில் 2,750 ஹெக்டேர் பரப்பில் மட்டும் அகற்றப்பட்டுள்ளதால், மீதமுள்ள பரப்பில் சீமைக்கருவேல மரங்களை அகற்ற பொது ஏலம் நடத்த உத்தரவிட்டு, விசாரணையை நவம்பர் 24ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

விசாரணைக்குப் பின், சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் ஐந்து இடங்களில் மஞ்சள் பை வழங்கும் இயந்திரங்கள் அமைக்க உள்ளதாகவும், பிளாஸ்டிக் பொருட்களை அழிக்கும் இயந்திரங்கள் வரும் 10ஆம் தேதி அமைக்க உள்ளதாகவும் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: கோவை கார் வெடிப்பு சம்பவம்: போலீசார் தொடர் கண்காணிப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.