ETV Bharat / state

முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியில் 6 பாடங்களுக்கு கலந்தாய்வு - பள்ளி கல்வி துறை இயக்குனர்

தமிழ், ஆங்கிலம், வணிகவியல், பொருளியல், கணிதம், இயற்பியல் ஆகிய ஆறு பாடங்களுக்கான பணிநியமான நேரடி கலந்தாய்வு நாளை நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

Etv Bharatமுதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியில் 6 பாடத்திற்கு கலந்தாய்வு
Etv Bharaமுதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியில் 6 பாடத்திற்கு கலந்தாய்வுt
author img

By

Published : Oct 14, 2022, 12:24 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள மேல்நிலை பள்ளிகளில் பணிபுரிய 14 பாட பிரிவுகளில், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர் நிலை 1, கம்ப்யூட்டர் பயிற்றுநர் நிலை 1 உள்ளிட்ட 2,849 பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ், ஆங்கிலம், வணிகவியல், பொருளியல், கணக்கு, இயற்பியல் ஆகிய பாடங்களுக்கு நாளை (அக் . 15) காலை 9 மணி முதல் கலந்தாய்வு நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அனுப்பப்பட்ட அழைப்பு கடிதம் மற்றும் அனைத்து கல்வி சான்றிதழ் நகலுடன் வரவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எழும்பூர் பெண்கள் மேல்நிலை பள்ளியில் தமிழ் பாடத்திற்கும் பள்ளி கல்வி துறை இயக்குநர் அலுவலக வளாகத்தில் ஆங்கில பாடத்திற்கும், சேத்துப்பட்டு எம் சி சி பள்ளியில் வணிகவியல் பாடத்திற்கும். அசோக் நகர் மேல்நிலை பள்ளியில் பொருளியல் பாடத்திற்கும் திருவல்லிக்கேணி லேடி வில்லிங்டன் மேல்நிலை பள்ளியில் கணக்கு பாடத்திற்கும் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இயற்பியல் பாடத்திற்கும் பணி ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:ஓய்வுபெற்ற ஆசிரியருக்கு பணப்பலனை அளிக்க சென்னை நீதிமன்றம் உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.