ETV Bharat / state

'பேட்டரி வாகன பராமரிப்பு டெண்டரில் ஊழல்!'

சென்னை மாநகராட்சியின் பேட்டரி வாகன பராமரிப்பு டெண்டரில் ஊழல் நடந்திருப்பதாக அறப்போர் இயக்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

author img

By

Published : Oct 13, 2021, 6:33 AM IST

அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டு
அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டு

சென்னை: இது தொடர்பாக அறப்போர் இயக்கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "பேட்டரி வாகன பராமரிப்பு நான்கு டெண்டர்களிலும் ஏழு முதல் 10 பேர் போட்டிப் போட்டுள்ளனர். ஆனால் ஊழல் முறைகேட்டில் ஊறிய அலுவலர்கள் எப்படியாவது டெண்டர் செட்டிங் செய்ய வேண்டும் என்பதற்காக தற்போது டெண்டர் விதிகளை வைத்து செட்டிங் செய்கிறார்கள்.

பேட்டரி வாகன தயாரிப்பாளர்கள் டெண்டரில் தேர்ச்சிபெற 2015 முதல் 2019ஆம் ஆண்டுகள் வரை சராசரியாக 50 வாகனங்கள் அரசுக்கு சப்ளை செய்திருக்க வேண்டும் என்று விதி வைத்தார்கள். அதாவது கடந்த மூன்று ஆண்டுகளில் அந்த அனுபவம் இருந்தால் தேர்ச்சி இல்லை என்று கூறி வாகன உற்பத்தியாளர்களே தேர்ச்சிபெறா வண்ணம் செய்தார்கள்.

Best and-Fast Metal Fab என்னும் ஒரு நிறுவனத்திற்கு மட்டும் செட்டிங் செய்வதற்காக இதைச் செய்தார்கள். நான்கு பேக்கேஜ்களிலும் இந்த நிறுவனம் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளது என்று கூறி financal bidஇல் போட்டி இல்லாமல் அவர்கள் கேட்கும் விலைக்கு சிங்கிள் டெண்டராக வழங்கி உள்ளார்கள்.

டெண்டர் விதியில் போட்டிபோடும் ஒப்பந்ததாரர் நிறுவனங்களுக்குள் நேரடி சம்பந்தம் இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் டெண்டர் விதிப்படி அவர்கள் டெண்டரிலிருந்து தகுதி இல்லாதவர் என்று நீக்கப்பட வேண்டும்.

இதன்படி Best and Fast Metal Fab உடனடியாக இந்த டெண்டரில் தகுதி இல்லை என்று நீக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் மெக்கானிக்கல் செட்டிங் அலுவலர்கள் அந்த நிறுவனத்திற்கு செட்டிங் செய்வதால் இதைக் கண்டுகொள்ளவில்லை.

மேலும் சராசரியாக ஒரு வாகனத்திற்கு ரூ.18,000 பராமரிப்பு ஆகும் இடத்தில் கிட்டத்தட்ட 50 விழுக்காடு இதைவிட அதிகமாகக் கொடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதன்மூலம் அரசுக்கு இந்த டெண்டரில் குறைந்தபட்சம் ரூ.30 லட்சம் இழப்பு ஏற்படும் என அறிகிறோம்.

மேலும் உடனடியாக இந்த நான்கு டெண்டர்களும் ரத்துசெய்யப்பட வேண்டும். விசாரணை நடத்தி குற்றவியல் - துறை நடவடிக்கை அலுவலர்கள், ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த முறைகேட்டில் ஈடுபட்ட அலுவலர்கள் மீது பணி இடை நீக்கம் நடவடிக்கை உடனடியாக எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க: காலாண்டு, அரையாண்டு தேர்வு கிடையாது - அமைச்சர் அன்பில் பொய்யாமொழி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.