ETV Bharat / state

மின் செலவை குறைக்க நகராட்சிகள் சொந்த நிதியில் சோலார் பேனல் வைத்துக்கொள்ளலாம் - அமைச்சர் நேரு - எம்எல்ஏ ராமலிங்கம்

மின் செலவை குறைக்க நகராட்சி மற்றும் மாநகராட்சிகள் விரும்பினால், தங்கள் சொந்த நிதியில் சோலார் பேனல்கள் (சூரிய சக்தி தகடுகள்) அமைத்துக் கொள்ளலாம் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

Minister KN Nehru
அமைச்சர் நேரு
author img

By

Published : Apr 19, 2023, 4:35 PM IST

சென்னை: சட்டப்பேரவையில் வினாக்கள் - விடை நேரத்தில் நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம் கேள்வி எழுப்பி பேசுகையில், "நாமக்கல்லில் உள்ள பாதாள சாக்கடை கால்வாயை தூர்வாரி அகலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். நகரின் மையப்பகுதியில் ஓடும் கால்வாயில், மழை நீர் கால்வாயை சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

இதற்குப் பதில் அளித்த நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, "நாமக்கல்லில் விடுபட்ட பகுதிகளில் பாதாளச் சாக்கடைத் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். நகரின் மையப்பகுதியில் ஓடுவது ஆறு என்றாலும், அது நீர்வளத் துறைக்குச் சொந்தமானது. மழைநீர் கால்வாயை சரி செய்ய வேண்டியது அரசின் கடமை. எனவே சம்பந்தப்பட்ட துறையிடம் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும்" எனக் குறிப்பிட்டார்.

தொடர்ந்து துணைக்கேள்வி எழுப்பிய சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம், "நாமக்கல் நகராட்சியில் மாதம் ஒன்றுக்கு ரூ.75 லட்சம் மின் கட்டணம் செலுத்தப்படுகிறது. எனவே, சூரியஒளி மின்சக்தி அமைப்பு உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?" என வினவினார். இதற்குப் பதிலளித்து பேசிய அமைச்சர் கே.என்.நேரு, "சோலார் பேனல் அமைப்பதை அரசு முன்னெடுக்கப் போவதில்லை. நகராட்சி மற்றும் மாநகராட்சி சார்பில் சொந்த நிதியில் தான் செய்து கொண்டிருக்கின்றார்கள். அந்த வகையில் தேவையெனில் நாமக்கல் நகராட்சியின் சொந்த நிதியில் சோலார் பேனல் அமைத்துக் கொள்ளலாம்" எனக் குறிப்பிட்டார்.

இதையும் படிங்க: திண்டுக்கல் - குமுளி சாலையை 4 வழிச்சாலையாக மாற்ற நடவடிக்கை: அமைச்சர் எ.வ.வேலு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.