கரோனா வைரஸ் சென்னையில் அதி தீவிரமாகப் பரவி வருகிறது இந்த பரவலைத் தடுக்க மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் தமிழக அரசு நோய் பரவலைத் தடுக்க சென்னை செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களிலும் ஜூன் 30ஆம் தேதி வரை முழு ஊரடங்கு என அறிவித்தது.
இந்த நிலையில் சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட அனைத்து இறைச்சிக் கடைகளையும் ஜூன் 30ஆம் தேதி வரை மூடப்படும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் பெரம்பூர், வில்லிவாக்கம், கள்ளிகுப்பம் மற்றும் சைதாப்பேட்டை ஆகிய நான்கு இறைச்சி கூடங்கள் இயங்கி வருகின்றன.
இந்த முழுமையான ஊரடங்கு காலத்தில் பெருநகர சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள நான்கு காட்சிக் கூடங்கள் மற்றும் நான் நகராட்சி எல்லைக்குள்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து கோழி, ஆடு, மாடு, இறைச்சி கடைகள் மற்றும் மீன் கடைகள் ஆகியவை ஜூன் 19 முதல் ஜூன் 30ஆம் தேதி வரை முழுமையாக மூடப்படுகின்றது.
பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் இதற்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாநகராட்சி சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.