ETV Bharat / state

சென்னைக்கு இரவு நேர ஊரடங்கு தேவைப்படாது: மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் - சென்னை மாவட்ட செய்திகள்

சென்னைக்கு இரவு நேர ஊரடங்கு தேவைப்படாது என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

சென்னைக்கு இரவு நேர ஊரடங்கு தேவைப்படாது
சென்னைக்கு இரவு நேர ஊரடங்கு தேவைப்படாது
author img

By

Published : Apr 9, 2021, 8:46 PM IST

சென்னை மாநகராட்சியில் கரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கு நியமனம் செய்யப்பட்டுள்ள ஐஏஎஸ், வருவாய்துறை, காவல்துறை, மருத்துவத்துறை உள்ளிட்ட அலுவலர்களுடன் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் இன்று (ஏப். 9) ஆலோசனை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "சென்னையில் பிப்ரவரி மாதத்தில் பாதிப்பு எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு 120 பேர் என்றளவில் குறைந்தது. மார்ச் முதல் அதிகரித்துள்ளது. முக்கியமாக கடந்த 45 நாள்களில் அதிகரித்துள்ளன. அன்றாட பாதிப்பு 1,500 வரை ஏற்படுகிறது. சென்னையில் கடந்த சில நாட்களாக 10 மடங்கு அளவிற்கு கரோனா அதிகரித்துள்ளது.

களப்பணியில் நியமனம் செய்யப்படுவர்கள் மீண்டும் வீடுதோறும் காய்ச்சல், ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு போன்ற பரிசோதனை மேற்கோள்ளப்படும். இதன் மூலம் 99 விழுக்காடு அளவிற்கு உயிரிழப்பை குறைக்க முடியும். இப்பணிக்காக 200 வீட்டுக்கு ஒருவர் என 6,000 பேரை தொடக்கத்தில் பயன்படுத்த உள்ளோம்.

சென்னைக்கு இரவு நேர ஊரடங்கு தேவைப்படாது

சென்னையில் 1 லட்சத்து 15 ஆயிரம் காய்ச்சல் முகாம் கடந்த மார்ச் மாதம் முதல் இதுவரை நடத்தப்பட்டுள்ளது. வீட்டு தனிமையில் இருப்போர் எண்ணிக்கை கடந்த ஆண்டை காட்டிலும் இந்தாண்டு அதிகரித்துள்ளது. சென்னையில் தடுப்பூசி செலுத்தப்பட்டோர் எண்ணிக்கை 9 லட்சத்தை கடந்து 10 லட்சத்தை நெருங்கி வருகிறது.

அதிகபட்சம் நாள் ஒன்றுக்கு 35 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. தேர்தல் காலத்தில் எண்ணிக்கை குறைந்தது. 45 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்குதான் தொற்றின் தாக்கம் அதிகம் ஏற்படுகிறது. தடுப்பூசி போட்டவர்களுக்கு கரோனா பாதிக்கப்பட்டாலும், மிதமான பாதிப்புதான் ஏற்படுகிறது.

45 வயதிற்கும் மேல் உள்ளவர்கள் ஆதாரை காண்பித்து தடுப்பூசியை செலுத்தி கொள்ளுங்கள் என்பதுதான் எங்களது வேண்டுகோளாக இருக்கிறது. சென்னையில் தடுப்பூசி செலுத்திய ஒரு நபருக்கு கூட பக்க விளைவுகள் ஏற்படவில்லை. சென்னையில் சிகிச்சை மையங்களில் 5,000 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன.

10 சிகிச்சை மையங்கள் தயார் நிலைக்கு கொண்டுவரப்பட உள்ளன. கடந்த ஆண்டில் அதிகபட்சம் 5,800 படுக்கைகள்தான் தேவைப்பட்டன. சென்னையில் வரும் வாரத்தில் 12,000 முதல் 13,000 படுக்கைகள் தயார் நிலையில் இருக்கும். கரோனா தடுப்பூசிக்காக யாரையும் வற்புறுத்த முடியாது. கடந்த ஆண்டு விதிமீறல் தொடர்பாக 3 கோடிக்கு மேல் வசூலானாது. அபராதம் விதிப்பது துன்புறுத்தல் கிடையாது.

மற்ற மாநிலத்தை காட்டிலும் தமிழ்நாட்டின் அபராதத் தொகை குறைவுதான். சென்னையில் பாதிப்புடையோர் இல்லங்களில் ஸ்டிக்கர் மட்டும் ஒட்டப்படும். 3 பேருக்கு மேல் பாதிப்பு இருக்கும் தெருக்கள் தனிமைப்படுத்தப்படும். 10க்கும் மேல் பாதிப்பு இருக்கும் தெருக்கள் முழுமையாக அடைக்கப்படும். தன்னார்வலர்கள் மூலம் அப்பகுதிகளில் பணிகள் மேற்கொள்ளப்படும்.

தனிமைப்படுத்தபட்டோர் இல்லங்கள் நாள் ஒன்றுக்கு 2 முறை கண்காணிப்படும். 14 நாள்களுக்கு பிறகு குணமடைந்ததாக கருதப்படும். தற்போது மேற்கொள்ளபட உள்ள தடுப்பு நடவடிக்கைகள் மூலம் ஒரு மாதத்தில் பதிப்பு எண்ணிக்கை குறையத் தொடங்கும். எனவே சென்னைக்கு இரவு நேர ஊரடங்கு தேவைப்படாது" என்றார்.

இதையும் படிங்க: ஒரு மாசமா எதுவும் பறிமுதல் செய்யவில்லை' - விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பிய ஆணையர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.