ETV Bharat / state

கரோனா கட்டுப்படுத்தும் பணிகளில் ஏன் ஈடுபட முடியவில்லை? - சென்னை ஆணையர் விளக்கம்

author img

By

Published : Mar 31, 2021, 8:13 PM IST

ஆள் பற்றாக்குறை காரணமாக கரோனா கட்டுப்படுத்தும் பணிகளில் ஈடுபட முடியவில்லை என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார்.

மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் நேரில் சென்று பார்வையிட்டார்

தேர்தல் பணிகளில் ஈடுபடக்கூடிய காவல் துறையினருக்கு அஞ்சல் வாக்குப்பதிவானது இன்று நடைபெற்றுவருகிறது. எழும்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில் நடைபெற்று வரக்கூடிய அஞ்சல் வாக்குப்பதிவை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ’’சென்னையில் தேர்தல் பணிகளில் ஈடுபடவுள்ள 5800 காவலர்களுக்கு அஞ்சல் வாக்குப்பதிவானது 16 சட்டப்பேரவைத் தொகுதி மையங்களில் நடைபெற்றுவருகிறது.
அதேபோல் 80 வயதிற்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே வாக்களிக்கும்படி தேர்தல் ஆணையம் வசதிகளை ஏற்பாடுசெய்தது. அதன்படி 1.20 லட்சம் பேருக்கு 12டி படிவம் விநியோகம் செய்யப்பட்டது. அதில் 12 ஆயிரம் பேரின் விருப்ப மனு வந்தது. அதில் 7200 பேர் சரியான முறையில் வழங்கியுள்ளனர்.
அஞ்சல் வாக்குகளைப் பாதுகாப்பான முறையில் பெறுவதற்காகத் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக வாக்களிக்கத் தவறிய நபர்களுக்கு மீண்டும் 3ஆம் தேதி அஞ்சல் வாக்கு நடத்த திட்டமிட்டுள்ளது.

பதற்றமான வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தியும், நுண் பார்வையாளர்கள் கொண்டும், மத்திய பாதுகாப்புப் படையினர் கூடுதலாக அமைத்தும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட உள்ளது. காவலர்கள் ரேண்டம் முறையில் வாக்குச்சாவடிகளில் பணிகளில் ஈடுபட உள்ளனர்.

இதையடுத்து, ஆள் பற்றாக்குறை உள்ளதால் கரோனாவைக் கட்டுப்படுத்தும் பணிகளில் ஈடுபட முடியாமல் போகிறது. தேர்தலுக்குப் பிறகு மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சீல்வைப்பு போன்ற தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட உள்ளோம், கட்டுப்பாடுகள் அதிகரிக்க கூடும்.

சென்னையில் இதுவரை 7.5 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மின்னணு வாக்குபதிவு இயந்திரத்தில் எந்தவித குளறுபடியும் ஏற்பட வாய்ப்பில்லை.

சென்னையில் தேர்தலுக்குப் பிறகு ஆபரேஷன் ரெயின் ஷவர் ஒன்றைத் தொடங்கி 45 வயதிற்கு மேல் உள்ள அனைத்து நபர்களுக்கும் கரோனா தடுப்பூசி போட திட்டமிட்டுள்ளது.

மேலும் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்ததும் ஊரடங்கு போட உள்ளதாக வதந்தி பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’’ எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: நாங்கள் என்ன பாஜகவா? கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவோம்- ராகுல் காந்தி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.