உலகளவில் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், இந்தியாவிலும் பரவத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில், மத்திய அரசு அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் மார்ச் 31-ஆம் தேதி வரை பயோ மெட்ரிக் வருகைப் பதிவைப் பயன்படுத்தாமல், வருகைப் பதிவேடு மூலம் தங்களின் வருகைப் பதிவை உறுதிப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே கொரோனா வைரஸ் பரவுதலைக் கட்டுப்படுத்தும் வகையில், உலக அளவில் கைகுலுக்குவதோ, முத்தமிடுவதோடு கூடாது எனவும், பொதுமக்கள் ஓரிடத்தில் கூடுதவற்கும் அனுமதிக்கக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மத்திய அரசின் அறிவுரையைப் பின்பற்றி தமிழ்நாட்டிலும், ஆசிரியர்கள் பயோ மெட்ரிக் கருவியில் விரல்ரேகை மூலம் தங்களின் வருகைப் பதிவை மார்ச் 31ஆம் தேதி வரை மேற்கொள்ள வேண்டாம் எனவும், வருகைப்பதிவேட்டில் உரியப் பதிவை மேற்கொள்ளுமாறு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கொரோனா வைரஸ் அச்சம்: எல்லை கொடியேற்ற நிகழ்வுகளில் மாற்றம்