ETV Bharat / state

ரயில் நிலையங்களில் கரோனா முன்னெச்சரிக்கை தீவிரம்! - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: கரோனா வைரசால் பாதிக்கப்பட்ட இரண்டாவது நபர் டெல்லியிலிருந்து ரயில் மூலம் சென்னை வந்ததால் சென்னையில் உள்ள ரயில் நிலையங்களில் கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

ரயில் நிலையங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

author img

By

Published : Mar 19, 2020, 8:02 PM IST

சென்னையில் கரோனா வைரசால் பாதிக்கப்பட்ட இரண்டாவது நபர் டெல்லியிலிருந்து ரயில் மூலம் சென்னை வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, சென்னையில் உள்ள ரயில் நிலையங்களில் கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெளி மாநில பயணிகள் அதிக அளவில் வருவதால், அங்கு வருபவர்கள் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே, நகருக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள். இந்தப் பணியில் ராஜிவ் காந்தி பயிற்சி செவிலியர்கள் ஈடுபட்டுள்ளனர். பாதுகாப்புப் பணியில் ரயில்வே பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் உடல் வெப்ப நிலை மற்றும் கரோனாவுக்கான அறிகுறிகள் உள்ள பயணிகள் சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவர். ரயில்வே துறை சார்பாக ரயில் நிலையம், ரயில் நிலைய கழிவறைகள், ரயில் பெட்டிகள், ரயில் கழிவறைகள் என அனைத்து இடங்களிலும் தூய்மைபடுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

ரயில் நிலையங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்.

இந்தப் பணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்த சுகாதார பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இது தவிர அனைத்து ரயில்களின் கைப்பிடிகளை அதிக அளவிலான மக்கள் தொட்டு செல்வதால் அவற்றை இயந்திரம் மூலமாக கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு தூய்மைப்படுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வரும் பெரும்பாலான பயணிகள் முகக்கவசம் அணிந்தே வருகின்றனர். சென்னை சென்டரல் ரயில் நிலையத்துக்கு நாள்தோறும் 40 வெளி மாநில ரயில்களில் 40ஆயிரம் பயணிகள் வருவதாகவும், ரயில் நிலையத்தில் சுமார் இரண்டு லட்சம் பயணிகள் பயன்படுத்துவதாகவும், ரயில்கள் மற்றும் அனைத்து வாயில்களிலும் உடல் வெப்பநிலை மற்றும் கரோனா வைரஸ் அறிகுறி பரிசோதனை செய்த பிறகே பயணிகள் நகருக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தற்போது கரோனா வைரஸ் பாதிப்பு மற்ற மாநிலங்களில் அதிகரித்துள்ளதால் விமான நிலையங்களில் சோதனை செய்தவதைத் தாண்டி ரயில் மூலமாக மற்ற மாநிலங்களில் இருந்து வருபவர்களையும் பரிசோதிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இந்தியா போன்ற நாடுகளில் மக்கள் ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்துக்கு எளிதாக சென்றுவிடலாம் என்பதால், இதுபோன்ற பாதிப்புகளை தவிர்க்க அதிக கவனத்துடன் அரசு செயல்பட வேண்டும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள். இந்நிலையில் ரயில் நிலையங்களில் தற்போது பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இது போன்ற நடவடிக்கையை தமிழக அரசு முன்கூட்டியே எடுத்திருக்க வேண்டும் என பொது சுகாதாரத் துறை வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: கோவிட்-19 வைரஸ் தொற்றால் சிறுதொழில்கள் பாதிக்காது - முதலமைச்சர் பழனிசாமி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.