மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ள கரோனா வைரஸ் கண்காணிப்பு குறித்த தகவலில், தமிழ்நாட்டில் 2 லட்சத்து 10 ஆயிரத்து 538 பயணிகளுக்கு விமான நிலையங்களில் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 90 ஆயிரத்து 824 பயணிகள் நேற்று வரை வீட்டில் 28 நாட்களுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறையின் தொடர் கண்காணிப்பில் இருக்க வைக்கப்பட்டனர்.
அவ்வாறு 28 நாட்கள் தொடர் கண்காணிப்பினை இன்று 19,824 பேர் முடித்துள்ளனர். இது தவிர 91 ஆயிரத்து 851 பயணிகள் 28 நாட்கள் வீட்டு கண்காணிப்பில் உள்ளனர். மேலும் தொற்று அதிக அளவில் பரவியுள்ள நாடுகளிலிருந்து வந்த 205 பயணிகள் விமான நிலையங்களின் அருகில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளில் தனிமைப் படுத்தப்பட்டு அரசு கண்காணிப்பில் உள்ளனர்.
மருத்துவமனையில் தனி வார்டில் 1,766 பயணிகள் தொடர் கண்காணிப்பில் இருந்து வருகிறார்கள். இதில், 5015 பேரின் ரத்தப்பரிசோதனை மாதிரிகள் பெறப்பட்டுள்ளன. இவர்களில் 621 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 4,099 பேருக்கு நோய்தொற்று இல்லை என்பது உறுதியாகிள்ளது. 295 நபர்களின் இரத்தம், சளி பரிசோதனை ஆய்வகங்களில் செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று ஒரே நாளில் 50 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 8 நோயாளிகள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.
டெல்லியில் நடைபெற்ற தப்லீக் ஜாமஅத் மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் 1,427 பேர் கண்டறியப்பட்டனர். அவர்கள் மற்றும் அவர்களோடு தொடர்புடையவர்கள் என 1,475 பேருக்கு ரத்தப்பரிசோதனை மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளது. டெல்லி கருத்தரங்கில் கலந்துகொண்டவர்களில் நேற்று வரை 526 பேருக்கும், இன்று 48 பேருக்கும் என மொத்தம் 574 பேருக்கு நோய்த் தொற்று உறுதியாகியுள்ளது.
தற்போது, தீவிர செயற்கை சுவாசம் அளிப்பதற்கான 3,371 வெண்டிலேட்டர்களும், 22,049 படுக்கைகளுடன் கூடிய தனி வார்டுகளும் தயார் நிலையில் உள்ளன. மேலும் இன்று நடத்தப்பட்ட பரிசோதனையில் ஏற்கனவே சென்னையில் நோய்த் தொற்று உள்ள ஒருவருடன் தொடர்புடைய 9 பேருக்கும், டெல்லி கருத்தரங்கில் கலந்து கொண்ட சென்னையைச் சேர்ந்த மூன்று பேருக்கும், டெல்லி கருத்தரங்கில் கலந்துகொண்ட திருச்சியைச் சேர்ந்த 13 பேர் உள்பட 50 பேருக்கும் நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது.
கரோனா தொற்று உறுதியாகியுள்ள 33 மாவட்டங்களின் நிலவரம்
வரிசை எண் | மாவட்டம் | கரோனா பாதிப்பு |
1 | சென்னை | 110 |
2 | திருநெல்வேலி | 38 |
3 | திண்டுக்கல் | 45 |
4 | ஈரோடு | 32 |
5 | திருச்சிராப்பள்ளி | 30 |
6 | கோயம்புத்தூர் | 59 |
7 | ராணிப்பேட்டை | 25 |
8 | செங்கல்பட்டு | 24 |
9 | தேனி | 23 |
10 | கரூர் | 23 |
11 | மதுரை | 19 |
12 | விழுப்புரம் | 16 |
13 | கடலூர் | 13 |
14 | திருவாரூர் | 12 |
15 | சேலம் | 12 |
16 | திருவள்ளூர் | 12 |
17 | விருதுநகர் | 11 |
18 | தூத்துக்குடி | 11 |
19 | நாகப்பட்டினம் | 11 |
20 | திருப்பத்தூர் | 11 |
21 | திருவண்ணாமலை | 9 |
22 | தஞ்சாவூர் | 8 |
23 | நாமக்கல் | 28 |
24 | கன்னியாகுமரி | 6 |
25 | காஞ்சிபுரம் | 6 |
26 | சிவகங்கை | 5 |
27 | வேலூர் | 5 |
28 | நீலகிரி | 4 |
29 | ராமநாதபுரம் | 2 |
30 | கள்ளக்குறிச்சி | 2 |
31 | அரியலூர் | 1 |
32 | பெரம்பலூர் | 1 |
33 | திருப்பூர் | 7 |