மக்கள் நல்வாழ்வு துறை வெளியிட்டுள்ள கரோனா பாதிப்பு குறித்த தகவலில், தமிழ்நாட்டில் இன்று 11 ஆயிரத்து 778 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், புதிதாக 716 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் கரோனா பாதிப்பாளர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து இரண்டில் இருந்து, 8 ஆயிரத்து 718 ஆக அதிகரித்துள்ளது.
இதில், "6 ஆயிரத்து 520 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று ஒரு திருநங்கை ஒருவருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 55 ஆய்வகங்களில், இதுவரை 2 லட்சத்து 66 ஆயிரத்து 687 பேருக்குப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 83 பேர் இன்று வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம், 2 ஆயிரத்து 134 பேர் பூரண குணமடைந்துள்ளனர், நோய் அறிகுறியுடன் 4,401 பேர் தனிமைப்படுத்தும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கரோனா பாதிப்பால் இன்று மட்டும் 8 பேர் உயிரிழந்ததன் மூலம் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது.
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 69 வயது முதியவர், 43 வயது முதியவர், 43 வயது பெண்மணி, 55 வயது பெண்மணி ஆகியோரும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 75 வயது முதியவரும், 70 வயது முதியவரும், 58 வயது பெண்மணியும், அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்த 57 வயது பெண்மணி ஆகியோர் கரோனா பாதிப்புடன் சிறுநீரகக் கோளாறு, நோய் பிரச்னை, சர்க்கரை நோய், ரத்த புற்றுநோய், ரத்த அழுத்தம் உள்ளிட்ட பிற நோய்களின் தாக்கம் இருந்ததால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்" எனத் தெரிவித்துள்ளது.
அதிகரிக்கும் கரோனா பாதிப்பின் அட்டவணை
வரிசை எண் | மாவட்டங்கள் | பாதிப்பு |
1 | சென்னை | 4,882 |
2 | திருவள்ளூர் | 467 |
3 | கடலூர் | 396 |
4 | செங்கல்பட்டு | 391 |
5 | அரியலூர் | 344 |
6 | விழுப்புரம் | 299 |
7 | காஞ்சிபுரம் | 156 |
8 | கோயம்புத்தூர் | 146 |
9 | பெரம்பலூர் | 132 |
10 | மதுரை | 121 |
11 | திருப்பூர் | 112 |
12 | திண்டுக்கல் | 111 |
13 | திருவண்ணாமலை | 105 |
14 | திருநெல்வேலி | 93 |
15 | நாமக்கல் | 76 |
16 | ஈரோடு | 70 |
17 | தஞ்சாவூர் | 69 |
18 | ராணிப்பேட்டை | 67 |
19 | திருச்சி | 67 |
20 | தேனி | 66 |
21 | கள்ளக்குறிச்சி | 61 |
22 | தென்காசி | 53 |
23 | கரூர் | 52 |
24 | நாகப்பட்டினம் | 45 |
25 | விருதுநகர் | 44 |
26 | சேலம் | 35 |
27 | தூத்துக்குடி | 35 |
28 | வேலூர் | 34 |
29 | திருவாரூர் | 32 |
30 | ராமநாதபுரம் | 30 |
31 | திருப்பத்தூர் | 28 |
32 | கன்னியாகுமரி | 26 |
33 | கிருஷ்ணகிரி | 20 |
34 | நீலகிரி | 13 |
35 | சிவகங்கை | 12 |
36 | புதுக்கோட்டை | 6 |
37 | தருமபுரி | 5 |
விமான நிலைய தனிமைப்படுத்தலில் வெளிநாட்டிலிருந்து வந்த 4 பேருக்கு இன்று கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று சென்னையில் மட்டும் 510 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 21 மாவட்டங்களில் நோய்களின் தாக்கம் இன்றும் ஏற்பட்டுள்ளது.