சென்னை: தமிழ்நாட்டில் புதிதாக 64 ஆயிரத்து 993 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் தமிழ்நாட்டில் 669 நபர்களுக்கும், அமெரிக்காவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்த ஒருவருக்கும் என மொத்தம் 670 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 1 கோடியே 78 லட்சத்து 33 ஆயிரத்து 904 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவில் இதுவரை 8 லட்சத்து 58 ஆயிரத்து 272 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியாகியிருக்கிறது. தற்போது மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் மையங்களில் 4 ஆயிரத்து 483 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். தொற்றினால் இறந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 539ஆக உயர்ந்துள்ளது. சென்னையைத் தொடர்ந்து கோயம்புத்தூர், செங்கல்பட்டு மாவட்டத்தில் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
மாவட்ட வாரியாக மொத்தப் பாதிப்பு:
சென்னை - 2,38,288
கோயம்புத்தூர் - 56,349
வேலூர் - 21,112
திருவண்ணாமலை - 19,542
திருப்பூர் - 18,590
தஞ்சாவூர் - 18,325
தேனி - 17,192
கன்னியாகுமரி - 17,184
விருதுநகர் - 16,704
தூத்துக்குடி - 16,381
ராணிப்பேட்டை - 16,270
திருநெல்வேலி - 15,799
விழுப்புரம் - 15,301
திருச்சி- 15,102
ஈரோடு - 14,939
புதுக்கோட்டை - 11,700
நாமக்கல் - 11,865
திண்டுக்கல் - 11,573
திருவாரூர் - 11,446
கள்ளக்குறிச்சி - 10,916
தென்காசி - 8,582
நாகப்பட்டினம் - 8,681
நீலகிரி - 8,416
கிருஷ்ணகிரி - 8,207
திருப்பத்தூர் - 7,657
சிவகங்கை - 6,822
ராமநாதபுரம் - 6,492
தருமபுரி - 6,672
கரூர் - 5,527
அரியலூர் - 4,753
பெரம்பலூர் - 2,291
சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 959
உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 1,044
ரயில் மூலம் வந்தவர்கள் - 428
இவ்வாறு மக்கள் நல்வாழ்வுத்துறை அளித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.