சீனாவில் தொடங்கி உலகின் பல்வேறு மூலைகளும் வேகமாகப் பரவிவரும் கொரோனா வைரஸ் தாக்கம் தற்போது இந்தியாவில் தீவிரமடைந்துள்ளது. வைரஸ் பாதிப்பால் இந்தியாவில் இதுவரை இரண்டு பேர் உயிரிழந்துள்ள நிலையில், 84 பேர் பாதிப்படைந்துள்ளனர்.
இதனால் இந்தியா முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், வைரஸ் பாதிப்பை மத்திய அரசு தேசிய பேரிடராக அறிவித்துள்ளது. தொடர்ந்து கொரோனா வைரஸ் பாதிப்பை (கோவிட்-19) தமிழ்நாடு பொதுச் சுகாதாரச் சட்டம் 1939ன் கீழ் அறிவிக்கப்பட்ட தொற்றுநோய்ப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதனை அரசிதழிலும் சேர்த்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பை தொற்று நோயாக அறிவித்து அரசிதழில் வெளியிட்டது தமிழக அரசு என்று எழுத வேண்டும். பொது சுகாதாரச் சட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட
இதையும் படிங்க: கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு 4 லட்சம் ரூபாய் உதவித்தொகை!