ETV Bharat / state

கரோனா வைரஸ் பரவலைக் கண்காணிக்க செயலி - கலக்கும் சென்னை மாநகராட்சி!

author img

By

Published : Apr 1, 2020, 11:57 PM IST

Updated : Apr 2, 2020, 12:49 PM IST

சென்னை: சென்னை மாநகரிலுள்ள 10 லட்சம் இடங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவலைக் கண்காணிக்க, 15 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதற்கென நவீன தொழில்நுட்பத்துடன் பிரத்யேக செயலி ஒன்றை மாநகராட்சி உருவாக்கியுள்ளது.

prakash
prakash

கரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தப் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளைச் சென்னை மாநகராட்சி எடுத்து வருகிறது. மாநகராட்சி பகுதிகளிலுள்ள 2,500 வீடுகளைக் கொண்ட பகுதியை மாநகராட்சி ஊழியர்கள் தினமும் கண்காணித்து வருவதோடு, ஆய்வு நடத்தியும் வருகின்றனர். அந்தந்தப் பகுதியில் உள்ளவர்களுக்கு காய்ச்சல், இருமல், மூச்சுத் திணறல் உள்ளிட்ட பிரச்னைகள் இருக்கிறதா என்ற விவரங்களைச் சேகரித்துவருகின்றனர்.

இந்தப் பணிகளை மேற்கொள்ள மாநகராட்சி சார்பில் பிரம்மாண்ட திட்டம் ஒன்று வகுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறுகையில், "சென்னை மாநகராட்சி பகுதி முழுவதும் கண்காணிக்க ஆயிரக்கணக்கான சுய உதவிக் குழு பெண்கள், சுகாதாரத்துறை பணியாளர்கள், ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களை ஈடுபடுத்தத் திட்டமிட்டுள்ளோம்.

சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்.

மாநகராட்சி ஊழியர்கள், தன்னார்வலர்கள் உள்பட 15 ஆயிரம் பேர் இணைந்து, சென்னை மாநகரில் உள்ள தனி வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புப் பகுதிகள் உள்பட மாநகரில் உள்ள 10 லட்சம் இடங்களில், கண்காணிப்பு பணியை மேற்கொள்ளவுள்ளனர்.

ஆய்வின்போது, ஒரு பகுதியில் அதிக எண்ணிக்கையிலான நபர்களுக்குக் காய்ச்சல், மூச்சுத் திணறல் போன்ற பிரச்னைகள் இருந்தால் கண்டறிய முடியும்" என தெரிவித்தார்.

கரோனாவைத் தடுக்கும் டிராக்கர் செயலி அறிமுகம்:

இப்பணிகளை ஒருங்கிணைப்பதோடு, எளிதாக மேற்கொள்ளும் வகையில் சென்னை மாநகராட்சி சார்பில் "கரோனா டிராக்கர்" செயலி இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் செயலியைச் சென்னை மாநகராட்சி இணையதளத்தில் உள்ள இணைப்பு (லிங்க்) மூலம் மக்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

ஆண்ட்ராய்டு செல்போன் வைத்திருப்பவர்கள் செயலியை எளிதாகப் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும்.

செயலி பற்றிய விளக்கும் வீடியோ.

ஒரு செல்பி அனுப்பினால் வீடு தேடி வரும் உதவி:

கரோனா டிராக்கர் செயலி மூலம் தனிமைப்படுத்தப்பட்ட 24 ஆயிரம் வீடுகளில், ஏதேனும் மருத்துவப் பிரச்னை இருந்தால், அவர்கள் தங்கள் செல்போனில் செல்பி எடுத்து அனுப்பினால் போதும். உடனே அவர் எந்த வார்டு, எந்தத் தெருவில் இருக்கிறார் என்ற தகவல் சேகரிக்கப்பட்டு, மாநகராட்சி சார்பில் அவர்களுக்கு மருத்துவ உதவிகள் வழங்கப்படும்.

தேவைப்பட்டால் பாதிக்கப்பட்டவரின் இருப்பிடத்துக்கே மருத்துவ அலுவலகர்கள் உடனடியாக செல்வார்கள் அல்லது மருத்துவமனைக்கு அழைத்துவர ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசர கால உதவிகள் செய்து மேற்கொள்ளப்படும்.

இந்த வசதியைப் பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்த முடியும். செயலியைக் கையாளுவதில் சிரமம் உள்ள வயதானவர்கள், தெரியாதவர்கள், கரோனா தொற்று அறிகுறி இருக்கும் நபர்களைக் கண்டறிந்தால் இளம் தலைமுறையினரிடம் உதவி கோரி, அவர்களை புகைப்படம் எடுத்து அனுப்ப அறிவுறுத்தலாம் என சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் - கே.எஸ். அழகிரி

Last Updated : Apr 2, 2020, 12:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.