இதுதொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் உள்ள 72 ஆய்வகங்களில் 12 ஆயிரத்து 807 நபர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், முதல் முறையாக ஆயிரத்து 149 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டில் இருந்த 1054 நபர்களுக்கும், வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்த 95 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில், இதுவரை கரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22 ஆயிரத்து 333 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 9 ஆயிரத்து 400 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றவர்களில் இன்று 757 பேர் உள்பட 12,757 பேர் பூரண குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தனிமைப்படுத்தும் முகாம்களில் 6 ஆயிரத்து 710 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் சிகிச்சை பலனின்றி 13 பேர் இன்று உயிரிழந்துள்ளனர்.
இதன் மூலம் இறந்தவர்களின் எண்ணிக்கை 173ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று 804 பேருக்கும், செங்கல்பட்டில் 85 பேருக்கும், திருவள்ளூரில் 45 பேருக்கும், திருவண்ணாமலையில் 45 பேருக்கும் என 22 மாவட்டங்களில் நோய் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு விவரம்
வரிசை எண் | மாவட்டங்கள் | பாதிப்பு எண்ணிக்கை |
1 | சென்னை | 14,802 |
2 | செங்கல்பட்டு | 1,177 |
3 | திருவள்ளூர் | 948 |
4 | கடலூர் | 461 |
5 | திருவண்ணாமலை | 419 |
6 | காஞ்சிபுரம் | 407 |
7 | அரியலூர் | 365 |
8 | திருநெல்வேலி | 352 |
9 | விழுப்புரம் | 346 |
10 | மதுரை | 269 |
11 | கள்ளக்குறிச்சி | 246 |
12 | தூத்துக்குடி | 226 |
13 | சேலம் | 176 |
14 | கோயம்புத்தூர் | 146 |
15 | பெரம்பலூர் | 141 |
16 | திண்டுக்கல் | 139 |
17 | விருதுநகர் | 123 |
18 | திருப்பூர் | 114 |
19 | தேனி | 109 |
20 | ராணிப்பேட்டை | 98 |
21 | தஞ்சாவூர் | 89 |
22 | திருச்சி | 88 |
23 | தென்காசி | 86 |
24 | ராமநாதபுரம் | 84 |
25 | கரூர் | 81 |
26 | நாமக்கல் | 78 |
27 | ஈரோடு | 71 |
28 | கன்னியாகுமரி | 67 |
29 | நாகப்பட்டினம் | 60 |
30 | திருவாரூர் | 47 |
31 | வேலூர் | 43 |
32 | சிவகங்கை | 33 |
33 | திருப்பத்தூர் | 32 |
34 | கிருஷ்ணகிரி | 28 |
35 | புதுக்கோட்டை | 26 |
36 | நீலகிரி | 14 |
37 | தருமபுரி | 8 |
மேலும், விமானங்கள் மூலம் வருகை தந்த இரண்டாயிரத்து 731 பயணிகளில் இரண்டாயிரத்து 703 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. மே 29, 30 ஆகிய தேதிகளில் விமானங்கள் மூலம் வந்த 311 நபர்களின் பரிசோதனை ஆய்வகத்தில் நடைபெற்று வருகின்றன. இரண்டாயிரத்து 351 பேருக்கு நோய் தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது. ரயில்களின் மூலம் வந்த 10 ஆயிரத்து 232 பயணிகளில் 9 ஆயிரத்து 607 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
கடந்த 26ஆம் தேதி முதல் வருகை தந்த பயணிகள் ஆயிரத்து 815 பேர் பரிசோதனை ஆய்வகத்தில் உள்ளனர். ரயிலில் வந்த 221 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி ஆகிய விமான நிலையங்களில் 158 உள்நாட்டு விமானங்கள் மூலம் தமிழ்நாடு வந்த 9 ஆயிரத்து 927 நபர்களில் 20 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. விமானம், ரயில், சொந்த வாகனம், பேருந்து என தமிழ்நாட்டிற்கு வந்த 99 ஆயிரத்து 651 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் ஆயிரத்து 570 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.