சென்னை: பொது சுகாதாரத்துறை இயக்குநரகம் இன்று (மே 20ஆம் தேதி) வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தகவலின்படி, ’தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் புதிதாக 15 ஆயிரத்து 741 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பு கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டில் இருந்த 34 நபர்களுக்கும் ஐக்கிய அரபு நாட்டிலிருந்து வந்த இரண்டு நபர்களுக்கும் கேரளாவிலிருந்து வந்த ஒருவருக்கும் என 37 நபர்களுக்குப் புதிதாக கரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் தமிழ்நாட்டில் இதுவரை 6 கோடியே 52 லட்சத்து 98 ஆயிரத்து 960 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பு கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் தமிழ்நாட்டில் 34 லட்சத்து 54 ஆயிரத்து 801 பேர் கரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பிற்கு உள்ளாகி இருந்தனர் என்பது தெரியவந்தது.
தற்பொழுது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 315 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மேலும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நோயாளிகளில் குணமடைந்த 44 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் சேர்த்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 34 லட்சத்து 16 ஆயிரத்து 461 என உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் அருகில் இருக்கும் செங்கல்பட்டில் 8 பேருக்கும் கோயம்புத்தூர், வேலூர்
மாவட்டத்தில் தலா இரண்டு நபர்களுக்கும் ஈரோடு காஞ்சிபுரம் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு நபருக்கும், சர்வதேச விமானத்தின் மூலம் வந்த 2 நபர்கள் என மொத்தமாக இன்று 37 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:தமிழ்நாட்டில் மேலும் 37 பேருக்கு கரோனா