சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட கோயம்பேடு வணிக வளாகம் பொதுமக்களின் அன்றாட தேவைகளுக்காக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மொத்த வியாபாரத்திற்காக மட்டும் செயல்பட்டு வருகிறது. கரோனா முதல் அலையின் போது கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் இருந்து பல்வேறு இடத்திற்கு கரோனா பரவியது.
இதைக் கருத்தில் கொண்டு இரண்டாவது அலையின் போது கோயம்பேடு மார்க்கெட் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வியாபாரிகளுக்கு பரிசோதனை செய்வது, தடுப்பூசி செலுத்துவது போன்ற செயல்களில் மாநகராட்சி ஈடுபட்டு வருகிறது.
அந்தவகையில், கோயம்பேடு வணிக வளாகத்தில் விற்பனை மேற்கொள்ளும் வியாபாரிகள், வாகன ஓட்டுனர்கள், உதவியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு சிறப்பு முகாம்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்த சிறப்பு தடுப்பூசி முகாமில் இதுவரை 8 ஆயிரத்து 239 வியாபாரிகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக நேற்று மட்டும் 703 வியாபாரிகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: