தமிழ்நாட்டில் கரோனா பரவலைத் தடுப்பதற்காகப் பல்வேறு நடவடிக்கைகள் அரசால் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. அந்த வகையில் மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும்விதமாக தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுவருகின்றன. இது தவிர நடமாடும் மருத்துவ முகாம்கள் மூலமும் மக்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுவருகிறது.
இந்நிலையில் இன்று (நவ. 14) தமிழ்நாடு முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் எட்டாவது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றுவருகிறது. அதாவது தமிழ்நாடு முழுவதிலுமுள்ள சத்துணவு மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், பூங்காக்கள், ரயில் நிலையங்கள், பள்ளிகள் என சுமார் 50,000 இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்தவும் குழுக்கல் அமைக்கப்பட்டு, தடுப்பூசி செலுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இந்த முகாம்களில் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கிய எடப்பாடி பழனிசாமி