ETV Bharat / state

ஒரு மாதத்தில் 9 லட்சம் கரோனா பரிசோதனைகள் - சென்னை மாநகராட்சி அறிவிப்பு - தமிழ்நாடு கரோனா செய்திகள்

சென்னை: மாநகராட்சி முழுவதும் நேற்று (ஜூலை 8) நடைபெற்ற 511 மருத்துவ முகாம்களில் 29,890 நபர்களுக்கு கரோனா கண்டறிதல் பரிசோதனை செய்யப்பட்டது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

corona
corona
author img

By

Published : Jul 9, 2020, 7:40 AM IST

கரோனா வைரஸ் காரணமாக சென்னையில் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதனை தடுக்க முகக்கவசம் வழங்குதல், கபசுரக் குடிநீர் வழங்குதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, அனைத்து மண்டலங்களிலும் மருத்துவ முகாம் அமைத்து மக்களுக்கு கரோனா கண்டறிதல் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

அதன்படி, சென்னையிலுள்ள 15 மண்டலங்களில் நேற்று (ஜூலை 08) 511 மருத்துவ முகாம்கள் நடைபெற்றன. இதில், அதிகபட்சமாக அண்ணாநகரில் 63 மருத்துவ முகாம்களும், ராயபுரம் மற்றும் கோடம்பாக்கத்தில் 50 மருத்துவ முகாம்களும் நடைபெற்றன.

இந்த 511 மருத்துவ முகாம்களில் மொத்தம் 29 ஆயிரத்து 890 நபர்களுக்கு பரிசோதிக்கப்பட்டு, அதில் 2,102 நபர்களுக்கு அறிகுறி இருந்ததால், அவர்கள் கரோனா வைரஸ் பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மீதமுள்ளவர்களுக்கு நோய்க்கு ஏற்ப மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன.

மேலும் மே 8 தேதி முதல் நேற்று வரை சென்னையிலுள்ள 15 மண்டலங்களில் மொத்தம் 14 ஆயிரத்து 234 மருத்துவ முகாம்கள் நடைபெற்றுள்ளதாகவும், அதில் 9 லட்சத்து 9 ஆயிரம் நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது எனவும் மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சொத்துவரி செலுத்த காலக்கெடு நீட்டிக்க வேண்டும் - டிடிவி தினகரன்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.