தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக சென்னையில் கோடம்பாக்கம், அண்ணா நகர், அடையாறு போன்ற இடங்களில் அதிகமாக பரவி வருகிறது. நாள்தோறும் சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துவருகிறது. நேற்று (செப்டம்பர் 1) 13 ஆயிரத்து 323 பேருக்கு பரிசோதனைசெய்யப்பட்டது. சென்னையில் இதுவரை மொத்தம் ஒரு லட்சத்து 36 ஆயிரத்து 697 பேர் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதில் ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 820 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். எஞ்சியுள்ள 13 ஆயிரத்து 107 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களில் 2 ஆயிரத்து 770 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், சென்னையில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் மண்டல வாரியான பட்டியலை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதன்படி,
கோடம்பாக்கம் - 15,531
அண்ணா நகர் - 15,569
ராயபுரம் - 13,578
தேனாம்பேட்டை - 13,269
தண்டையார்பேட்டை - 11701
திரு.வி.க. நகர் - 10448
அடையாறு - 10509
வளசரவாக்கம் - 8588
அம்பத்தூர் - 9514
திருவொற்றியூர் - 4460
மாதவரம் - 4880
ஆலந்தூர் - 5093
சோழிங்கநல்லூர் - 3782
பெருங்குடி - 4452
மணலி - 2157