சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு அபுதாபி, சிங்கப்பூர், துபாய் ஆகிய நாடுகளிலிருந்து விமானங்கள் வந்தன. இதில் வந்த பயணிகளை விமான நிலையத்தில் உள்ள கரோனா வைரஸ் சிறப்பு மருத்துவக் குழுவினர் பரிசோதனை செய்தனர். அப்போது இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்வீடன் ஆகிய நாடுகளிலிருந்து திரும்பிய 13 பெண்கள் உள்பட 56 பேர் வந்தனர். இவர்களை மருத்துவக் குழுவினர் கருவி முலம் பரிசோதனை செய்தனர்.
மேற்கூறிய நாடுகளிலிருந்து வரக்கூடிய பயணிகளை மருத்துவப் பரிசோதனையில் வைக்க மத்திய அரசு அறிவுரை வழங்கியிருந்ததால், இவர்களுக்கு கரோனா வைரஸ் அறிகுறி ஏதாவது இருக்கிறதா என்பதைக் கண்டறிய விமான நிலைய மருத்துவக் குழுவினர் மேல் சிகிச்சைக்காக தாம்பரம் சானிடோரியம் அரசு சிறப்பு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் தங்களுடைய மகன், மகளுடன் தங்கிவிட்டுத் திரும்பிய முதியவர்கள் அதிகமாக இருந்தனர். தற்போது அவர்கள் அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: ரஜினியின் பதிவை நீக்கிய ட்விட்டர் நிர்வாகம் - ஏன்?