இது குறித்து அவர் கூறுகையில், "சென்னை மாநகரில் கரோனா தொற்று உள்ளவர்களைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்க வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்பு நடத்தும் பணிகள் தற்போது 95 விழுக்காடு முடிந்துள்ளது.
இன்று சிறு பாதிப்புகள் உள்ள 400 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். ஆனால் அவர்களுக்குத் தொற்று எதுவும் இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. இப்பணியை சென்னை மாநகராட்சி சுகாதார ஊழியர்கள், தன்னார்வலர்கள் மேற்கொண்டுவந்தனர்.
இன்னும் ஓரிரு நாள்களில் கணக்கெடுப்புப் பணிகள் நிறைவடையும் எனக் கூறப்படுகிறது. மேலும், மாநகராட்சி சார்பில் நகரில் 10 இடங்களில் கரோனா தொற்று உள்ளதா எனக் கண்டுபிடிக்க மாதிரிகள் சேகரிக்கும் மையங்கள் அமைக்கப்பட்டு சேகரிக்கப்படுகின்றன. இவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு சோதனை செய்யப்படவுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 'கரோனாவை எதிர்க்கும் ஆற்றல் தென்கிழக்காசிய மக்களுக்கு இயல்பிலேயே உண்டு' - மூத்த விஞ்ஞானி மாரியப்பன்