சென்னையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களான சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இது தொடர்பாக, மாநகராட்சி அலுவலர் ஒருவர் கூறுகையில், ”உள்ளாட்சித் துறை அமைச்சரின் உத்தரவின்படி, பொறியாளர்கள் உள்பட அனைத்துத் தரப்பு அலுவலர்களும் ஊழியர்களும் கரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
அதனடிப்படையில் இன்று காலை முதலே இரு ரயில் நிலையங்கள் உள்ளிட்ட அனைத்து முக்கியமான பகுதிகளிலும் நோய்த் தொற்று பரவாமல் இருக்க கிருமி நாசினி தெளிக்கப்பட்டுவருகிறது.
மேலும், இந்த வைரஸ் குறித்த பொதுமக்களின் சந்தேகங்களுக்கு விளக்கமளிக்க உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள், அலுவலர்கள் என சுமார் மூன்றாயிரத்திற்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர்” என்றார்.
இதையும் படிங்க: கரோனா எதிரொலி: அரசு அலுவலகங்களில் முன்னெச்சரிக்கை தீவிரம்