சென்னை மதுரவாயலை அடுத்த அடையாளம்பட்டு பகுதியில் தனியார் கல்லூரிக்கு சொந்தமான விடுதியில் அரசு சார்பில் கரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தப்படும் வார்டு இயங்கி வருகிறது.
இங்கு 200க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில் ஆலப்பாக்கத்தை சேர்ந்த செல்வி(48), என்பவர் கரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த 1ஆம் தேதி இந்த மையத்திற்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அனுமதிக்கப்பட்ட நாள் முதல் செல்வி மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இங்கிருந்து வெளியே செல்ல வேண்டும் என்று கூறி வந்த நிலையில், வெளியே செல்ல முயன்றபோது 4 வது மாடியிலிருந்து தவறி கீழே விழுந்ததில் உடலில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கி உள்ளார்.
இதையடுத்து அங்கிருந்தவர்கள் செல்வியை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை செய்த போது செல்வியின் மகன் முதலில் கரோனாவால் பாதிக்கப்பட்டு இதே மையத்தில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தற்போது செல்வியும் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அனுமதிக்கப்பட்ட நாள் முதல் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகவும், இதன் காரணமாக இங்கிருந்து தப்பிப்பதற்காக முயன்றபோது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
கரோனா வார்டில் இருந்து தப்பிக்க முயன்ற பெண் உயிரிழப்பு!
சென்னை: கரோனா வார்டில் இருந்து தப்பிக்க முயன்ற போது மாடியில் இருந்து தவறி விழுந்து பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.