ETV Bharat / state

கரோனா பீதி: சட்டப்பேரவையில் இனி பள்ளி மாணவர்களுக்கு அனுமதி கிடையாது!

author img

By

Published : Mar 15, 2020, 5:58 PM IST

சென்னை: சட்டப்பேரவையின் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இந்தாண்டு பள்ளி மாணவர்கள் சட்டப்பேரவை நிகழ்வுகளை பார்ப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக பேரவை செயலாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

corona-panic-school-students-are-no-longer-allowed-in-tn-assembly

கரோனா வைரஸ் இந்தியாவில் தற்போது வேகமாக பரவி வருகிறது. இதைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. தமிழ்நாட்டில் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஐந்தாம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளுக்கும் மார்ச் 31ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்தி மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, சிகிச்சைக்கு ஒத்துழைக்க மறுப்பவர்களை கைது செய்து, தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

தமிழ்நாட்டில் சட்டப்பேரவை நடைபெறும்போது, பள்ளி மாணவர்கள் பார்வையிட்டு தெரிந்து கொள்வதற்கு அனுமதியை சட்டப்பேரவை செயலாளர் வழங்குவார். அதன் அடிப்படையில் அனுமதிக்கப்பட்ட நாளில் அந்த பள்ளியில் இருந்து மாணவர்கள் வருகைப் புரிந்து சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை பார்வையிட்டு தெரிந்து செல்வர். இந்த ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, தொடர்ந்து துறை வாரியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதமும், வாக்கெடுப்பும், கடத்த 9 ஆம் தேதி முதல் சட்டப்பேரவையில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்கு தலைமைச் செயலகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அங்கு வருபவர்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் பேசிய எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன், சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு நோய் தோற்று ஏற்படாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என நகைச்சுவையாக வேண்டுகோள் விடுத்தார்.

அதற்கு பதிலளித்து பேசிய சபாநாயகர் தனபால், பேரவையில் அதுபோன்ற சூழ்நிலை எதுவும் ஏற்படவில்லை எனவும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன எனவும் தெரிவித்தார்.

சட்டப்பேரவை நடைபெற்று வரும் நிலையில் மேற்கொள்ளப்பட்டுவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பேரவை செயலாளர் சீனிவாசன் கூறும்போது, "சட்டப்பேரவையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பொதுமக்கள் சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை காண வருவதற்கு முன்பே சோதனை செய்யப்பட்டு அனுமதிக்கப்படுகின்றனர்.

மேலும், சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை மாணவர்கள் காண்பதற்கு அனுமதியளிக்க வேண்டும் என பள்ளிகளில் இருந்து கடிதம் வந்துள்ளது. தற்போது உள்ள சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு இந்த ஆண்டு பள்ளி மாணவர்களுக்கு சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கு அனுமதியளிப்பதை நிறுத்தி வைத்துள்ளோம் எனவும், சட்டப்பேரவை வளாகத்தில் பொதுமக்கள் அதிகளவில் கூடுவதையும் தவிர்க்கும் வகையில், சோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'இஸ்லாமியர்கள் வாக்களிக்காமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்குமா?' - சி.ஏ.ஏ. குறித்து அமைச்சர்களிடம் பெண் முறையீடு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.