ஐதராபாத்: லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் (Legends League Cricket) தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் முன்னாள் நியூசிலாந்து வீரர் மார்டின் கப்தில் அதிரடியாக விளையாடி ஒரு ஓவரில் 5 சிக்சர் விளாசி சதம் அடித்தார். நேற்று ஒரு நாளில் மட்டும் மார்டின் கப்தில் பல்வேறு சாதனைகளை அடித்து நொறுக்கினார்.
சூரத்தில் உள்ள லாலாபாய் மைதானத்தில் கோனார்க் சூர்யாஸ் ஒடிசா அணிக்கு எதிரான ஆட்டத்தில் மார்டின் கப்தில் இந்த சாதனையை படைத்தார். பவர் பிளேயில் நவீன் ஸ்டீவர்ட் வீசிய ஓவரில் அடுத்தடுத்து 5 சிக்சர்களை பறக்கவிட்ட மார்டின் கப்தில் கடைசி பந்தில் பவுண்டரி அடித்து அசத்தினார்.
அந்த ஒரு ஓவரில் மட்டும் மாட்டின் கப்தில் 34 ரன்களை விளாசித் தள்ளினார். ஒரு ஒவரில் 30 ரன்கள் குவித்த தனது முந்தைய சாதனையை மார்டின் கப்தில் முறியடித்தார். அபராமாக விளையாடிய மார்டின் கப்தில் 54 பந்துகளில் 131 ரன்களை விளாசினார். அபாரமாக விளையாடிய மட்டுமின்றி தனது அணியையும் வெற்றி பெறச் செய்தார் மார்டின் கப்தில்.
MARTIN GUPTILL BROKE COMM BOX WINDOW. 🤯🔥
— Mufaddal Vohra (@mufaddal_vohra) October 1, 2024
- Vintage Guptill in LLC, 68 in just 29 balls. pic.twitter.com/VTWnB1FpVH
முதலில் விளையாடிய கோனார்க் சூர்யாஸ் ஒடிசா அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த ரிச்சர்ட் லெவி 21 பந்துகளில் 63 ரன்கள் குவித்தார். தொடர்ந்து விளையாடிய சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் அணியில் மார்டின் கப்தில் ருத்ர தாண்டவம் ஆடினார்.
இறுதியில் சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் அணி 4 ஓவர்கள் மீதம் வைத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று நீண்ட நாட்கள் ஆன போதிலும் மைதானத்தில் மார்டின் கப்தில் தன்னை மீண்டும் நிரூபித்து காட்டி இருக்கிறார் என்றால் அது மிகையாகாது. லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரின் புள்ளிகள் பட்டியலில் சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் முதலிடத்ததில் உள்ளது. வரும் சனிக்கிழமை நடைபெறும் லீக் ஆட்டத்தில் சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் அணி தொயம் ஐதராபாத் அணியை எதிர்கொள்கிறது.
இதையும் படிங்க: மகளிர் டி20 உலக கோப்பை: பரிசுத் தொகை முதல் போட்டி அட்டவணை வரை! முழு விபரம்! - Womens T20 World Cup