ETV Bharat / state

சென்னையில் விரைவில் கரோனா நினைவு பூங்கா!

உலகம் முழுவதும் ஏற்பட்ட கரோனா பாதிப்பை நினைவு கூறும் வகையில் விரைவில் கரோனா நினைவு பூங்கா அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

corona
சென்னை மாநகராட்சி
author img

By

Published : Jul 27, 2021, 4:35 PM IST

சென்னை: கரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு அதில் விதிவிலக்கல்ல. குறிப்பாக சென்னையில் இதுவரை 5 லட்சத்து 37 ஆயிரத்து 249 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதில் 5 லட்சத்து 27 ஆயிரத்து 435 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை சென்னையில் மட்டும் 8 ஆயிரத்து 312 பேர் இறந்துள்ளனர். முதல் அலையின்போது தடுமாறிய சென்னை, இரண்டாவது அலையில் விழித்துக் கொண்டது.

சென்னை மாநகராட்சி மிக சிறப்பாக நடவடிக்கையால் ஒரு மாதத்திற்குள் கரோனா இரண்டாம் அலையைக் கட்டுக்குள் கொண்டு வந்தது. இந்நிலையில், கரோனா பாதிப்பை நினைவுகூறும் வகையில் கரோனா பூங்கா அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

கரோனா பூங்கா

இதற்காக பழைய வண்ணாரப்பேட்டை மின்ட் பாலத்தின் கீழ் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான 3 ஏக்கர் நிலம் சீரமைக்கப்பட்டவுள்ளது. தற்போது பூங்காவின் வரைபடம் தயாரிப்பு பணி நடைபெற்று வருகிறது. பூங்கா அமைப்பதற்கான நிதி விரைவில் ஒதுக்கப்படும் என மாநகராட்சி உயர் அலுவலர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவிலேயே கரோனாவை நினைவூட்டும் வகையில் சென்னை மாநகராட்சி மட்டுமே இந்த முயற்சியை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஆச்சரியங்கள் நிறைந்த ராமப்பா கோயில்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.