ETV Bharat / state

வரும் நாள்களில் எவற்றுக்கெல்லாம் அனுமதி? - முதலமைச்சர் தகவல் - Cm announcement

சென்னை: தமிழ்நாட்டில் வரும் நாள்களில் எவையெல்லாம் இயங்கலாம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விரிவான அறிக்கை ஒன்றை தாக்கல்செய்துள்ளார்.

சிஎம்
சிஎம்
author img

By

Published : May 2, 2020, 7:57 PM IST

Updated : May 3, 2020, 9:25 AM IST

தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் (நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகள் தவிர - EXCEPT CONTAINMENT ZONES), கீழ்க்கண்ட பணிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது:

• 50 விழுக்காடு பணியாளர்களைக் கொண்டு (குறைந்தபட்சம் 20 நபர்கள்) மாநகராட்சி, நகராட்சிக்கு வெளியிலுள்ள பகுதிகளில், அதாவது ஊரக மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில், உள்ள அனைத்து தொழிற்சாலைகள் (ஜவுளித் துறை உள்பட) செயல்பட அனுமதிக்கப்படும்.

• 15,000-க்கும் மேற்பட்ட மக்கள் தொகை உள்ள பேரூராட்சிகளில் மட்டும், மாவட்ட ஆட்சியர் ஆய்வுசெய்து, சூழ்நிலைக்கேற்ப, ஜவுளித் துறை நிறுவனங்களை 50 விழுக்காடு பணியாளர்களைக் கொண்டு செயல்பட அனுமதிக்கலாம்.

• SEZ, EOZ, தொழிற் நகரியங்கள், தொழிற்பேட்டைகள் (ஊரகம், நகரம்):
50 விழுக்காடு பணியாளர்களைக் கொண்டுசெயல்பட அனுமதிக்கலாம். நகரப் பகுதிகளிலுள்ள தொழிற்பேட்டைகளில், ஜவுளித் துறை நிறுவனங்கள் இயங்க அனுமதி இல்லை.

• நகரப்பகுதிகளில் உள்ள ஏற்றுமதி நிறுவனங்களை மாவட்ட ஆட்சியர் ஆய்வுசெய்து சூழ்நிலைக்கேற்ப 50 விழுக்காடு பணியாளர்களைக் கொண்டு செயல்பட அனுமதிக்கப்படும்.

• மின்னணு வன்பொருள் (Hardware Manufacturers) உற்பத்தி: 50 விழுக்காடு பணியாளர்களைக் கொண்டுசெயல்பட அனுமதிக்கப்படும்.

• கிராமப்புறங்களில் உள்ள ஒருங்கிணைந்த நூற்பாலைகள் (Spinning mills) (ஷிஃப்ட் முறையில் தகுந்த இடைவெளியுடன்) 50 விழுக்காடு பணியாளர்களைக் கொண்டுசெயல்பட அனுமதிக்கப்படும்.

• நகரப்பகுதிகளில் உள்ள தோல் பொருள்கள், ஆடை ஏற்றுமதிக்கான வடிவமைப்பு, மாதிரிகள் உருவாக்கம்: மாவட்ட ஆட்சியர் ஆய்வுசெய்து, 30 விழுக்காடு பணியாளர்களைக் கொண்டுசெயல்பட அனுமதிக்கப்படும்.

• தகவல் தொழில்நுட்பம் (IT & ITeS): 50 விழுக்காடு பணியாளர்கள், குறைந்தபட்சம் 20 நபர்களைக் கொண்டுசெயல்பட அனுமதிக்கப்படும்.

• நகர்ப்புறங்களில் கட்டுமான பணிகள்: பணியிடத்திலேயே பணியாளர்கள் இருந்தால் மட்டும் அனுமதிக்கப்படும்; பணியாளர்களை ஒருமுறை மட்டும் வேறு இடத்திலிருந்து அழைத்துவர அனுமதிக்கப்படும்.

• அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களின் கட்டுமான பணிகள், சாலைப் பணிகள் அனுமதிக்கப்படும்.

• பிளம்பர், எலெக்ட்ரீசியன், ஏசி மெக்கானிக், தச்சர் உள்ளிட்ட சுயதிறன் பணியாளர்கள் அனைவரும் மாவட்ட ஆட்சியரிடம் உரிய அனுமதி பெற்ற பின்னர் அனுமதிக்கப்படுவர்.

• மாற்றுத்திறனாளிகள், முதியோர், நோயாளிகள் ஆகியோரின் சிறப்புத் தேவைகளுக்கான உதவியாளர்கள், வீட்டு வேலைப் பணியாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் உரிய அனுமதி பெற்று பணிபுரிய அனுமதிக்கப்படுவர்.

• அச்சகங்கள் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

• கட்டுமான பணிகளுக்குத் தேவையான ஹார்டுவேர், சிமெண்ட், கட்டுமான பொருள்கள், சானிடரிவேர், மின் சாதன விற்பனைக் கடைகள்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும். கட்டுமான பொருள்களை எடுத்துச் செல்ல எந்தவித தடையும் இல்லை.

• மொபைல் போன், கணிப்பொறி, வீட்டுப் பயன்பாட்டுப் பொருள்கள், மின் மோட்டார் ரிப்பேர், கண் கண்ணாடி விற்பனை, பழுது நீக்குதல் உள்ளிட்ட அனைத்து தனிக்கடைகள், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும்.

• கிராமப்புறங்களில் உள்ள அனைத்து தனிக் கடைகள், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்பபடும்.

• உணவகங்கள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் மட்டும் வழங்கலாம். மின் வணிக நிறுவனங்கள் ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டவாறு செயல்படலாம்.

• நகராட்சி, மாநகராட்சிகளில் உள்ள மால்கள் (Malls), வணிக வளாகங்கள் (Market complexes) தவிர்த்து, அனைத்து தனிக்கடைகள், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் செயல்பட மாவட்ட ஆட்சியர் சூழ்நிலைக்கேற்ப அனுமதிக்கலாம்.

பொது:

அனைத்து மாவட்ட ஆட்சியர்களும், மாநகராட்சி ஆணையர்களும் அரசால் அறிவுறுத்தப்பட்ட தகுந்த இடைவெளியைக் கடைப்பிடித்தும், போதுமான கிருமிநாசினிகளைப் பயன்படுத்தியும், பணியாளர்கள், தொழிலாளர்கள் பாதுகாப்பாகப் பணிபுரிவதைக் கண்காணிக்கவும், அரசால் வெளியிடப்பட்டுள்ள நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை (STANDARDS OPERATING PRODUCERS) தீவிரமாகக் கடைப்பிடிப்பதை உறுதிசெய்யவும் அறிவுறுத்தப்படுகிறது.

ஊரடங்கு உத்தரவு தொடர்வதால், பொது இடங்களில், ஐந்து நபர்களுக்கு மேல் மக்கள் கூடாமல் இருப்பதை கண்காணிக்கவும் அறிவுறுத்தப்படுகிறது.

ஏற்கனவே அரசால் அனுமதிக்கப்பட்ட அனைத்து தளர்வுகளும் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள வேளாண்மைப் பணிகள், வேளாண்சார்ந்த தொழில்கள் (AGRO PROCESSING), தொழில், வணிக செயல்பாடுகள், மருத்துவப் பணிகள், அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ளும் துறைகள், வங்கிகள், அம்மா உணவகங்கள், ஏடிஎம், ஆதரவற்றோர் இல்லங்கள் ஆகியவை எவ்வித தங்குதடையின்றி தொடர்ந்து முழுமையாகச் செயல்படலாம்.

கனிமம், சுரங்கப் பணிகள், கட்டுமான பணிகளுக்குத் தேவையான பொருள்களை வழங்கும் செங்கல் சூளைகள், கல் குவாரிகள், எம்-சாண்ட், கிரஷர்கள், இவற்றிற்கான போக்குவரத்து ஆகியன செயல்படலாம்.

பெரும் தொழிற்சாலைகளும், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும், கட்டுமான பணிகளுக்கும், பணிகளைத் தொடங்க மாவட்ட ஆட்சியர்/பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ஆகியோருக்கு இணைய வழியில் விண்ணப்பித்து பணியாளர் மற்றும் வாகனங்களுக்கு அனுமதி சீட்டுகள் பெற வேண்டும்.

நகரப் பகுதிகளில் பணியாளர்களை நிறுவனங்கள், தாங்கள் இயக்கும் பிரத்யேக பேருந்துகள் / வேன்கள் மூலம் பணிக்கு அழைத்து வரலாம். அந்த வாகனங்களில் 50 விழுக்காடு அளவிற்கு மட்டுமே தகுந்த இடைவெளியைக் கடைப்பிடித்து, பணியாளர்களை அழைத்து வர வேண்டும்.

சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், கிராமப்புற தொழில்கள், தனிக்கடைகள் ஆகியவை செயல்பட தனி அனுமதி தேவையில்லை.

மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், 33 விழுக்காடு பணியாளர்களுடன் தொடர்ந்து செயல்படும்.

ஏற்கனவே நடைமுறையில் உள்ள கீழ்க்காணும் செயல்பாடுகளுக்கான தடைகள், மறு உத்தரவு வரும்வரை தொடர்ந்து அமலில் இருக்கும்:

1. பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள், அனைத்து கல்வி நிறுவனங்கள்.

2. வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்கள் வழிபாடு மற்றும் அனைத்து மதம் சார்ந்த கூட்டங்கள்.

3. திரையரங்குகள், கேளிக்கைக்கூடங்கள், மதுக்கூடங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், கடற்கரை, சுற்றுலாத் தலங்கள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள், நீச்சல் குளங்கள், விளையாட்டு அரங்குகள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள் போன்ற இடங்கள்.

4. அனைத்து வகையான சமய, சமுதாய, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாசார நிகழ்வுகள், விழாக்கள், கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள்.

5. பொது மக்களுக்கான விமான, ரயில், பொதுப் பேருந்து போக்குவரத்து.

6. டாக்ஸி, ஆட்டோ, சைக்கிள் ரிக்ஷா.

7. மெட்ரோ ரயில், மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்து.

8. மாநிலங்களுக்கு இடையேயான பொது மக்கள் போக்குவரத்து.

9. தங்கும் விடுதிகள் (பணியாளர் விடுதிகள் தவிர), தங்கும் உணவகங்கள், ரிசார்ட்டுகள்.

10. இறுதி ஊர்வலங்களில் 20 நபர்களுக்கு மேல் பங்கேற்கக் கூடாது.

11. திருமண நிகழ்ச்சிகளுக்கு, தற்போது உள்ள நடைமுறைகள் தொடரும்.

அரசு வழங்கியுள்ள இந்த நடைமுறைகளைக் கடைப்பிடித்து, மாவட்ட ஆட்சியர்கள் / சென்னை மாநகர ஆணையர் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து, தொழிற்சாலைகளுக்கு தக்க அனுமதி வழங்கி, 6.5.2020 முதல் தொழிற்சாலைகள் செயல்பட நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

நோய்த்தொற்றின் பரவலைத் தமிழ்நாடு அரசு தொடர்ந்து கண்காணித்துவருகிறது. நோய்த் தொற்று குறையக் குறைய, தமிழ்நாடு அரசு மேலும் பல தளர்வுகளை அறிவிக்கும்.

கரோனா நோய்த்தொற்றின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு, பொதுமக்கள், முழு ஆதரவையும், ஒத்துழைப்பையும் நல்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Last Updated : May 3, 2020, 9:25 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.